250 கோடி இழப்பு? திணறும் ஆவின்! 3 ரூபாய் விலை குறைப்பு தந்த விளைவு? கால் பதிக்கிறதா அமுல்?
ஆவின் பால் நிறுவனத்திற்குப் போட்டியாகக் குஜராத்தைச் சேர்ந்த அமுல் நிறுவனம் தமிழ்நாட்டில் கால் பதிக்க உள்ளதாக ஒரு தகவல் சில மாதங்களாகவே பேசப்பட்டு வருகிறது.
சமீபத்தில் ஆங்கில நாளேடு ஒன்று இது குறித்து விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதன்படி அமுல் நிறுவனம் இப்போதைக்குத் தனது கிளையைத் தமிழ்நாட்டில் திறப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே சொல்லி இருக்கிறது.

அமுல் இங்கே வரப் போகிறதா? இல்லையா ? என்பது அல்ல பிரச்சினை. ஆவின் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது என்பதுதான் இங்கே கவனிக்க வேண்டிய செய்தி.
அது பற்றி தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. கடந்த ஆட்சிக் காலத்தில் ஆவின் பெரிய நிதிச்சுமையிலிருந்தது. அதைத் தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்தது முதல்வர் ஸ்டாலின் தனது முதல் கையெழுத்தாகப் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தார்.
முன்னதாகவே நிதிச்சுமையிலிருந்த ஆவினுக்கு இது மிகப்பெரிய அடியாக அமைந்தது. 3 ரூபாய் குறைத்ததன் மூலம் இந்த நிறுவனத்திற்குக் கிட்டத்தட்ட 250 கோடி நஷ்டம் ஏற்பட்டது என்று சொல்லப்படுகிறது. அதைத் தமிழ்நாடு அரசு தரவேண்டும். ஆனால் இதுவரை அந்த நிதியானது வழங்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில்தான் குஜராத் நிறுவனமான அமுல் தமிழ்நாட்டைக் குறித்துள்ளது. அதற்கான தேவையும் இங்கே உள்ளது. மக்கள் எந்தப் பொருளை வாங்க வேண்டும் என்று யாரும் கட்டுப்படுத்த முடியாது.

அதன்படி ஒரு தரமான நிறுவனம் என்று பெயர் எடுத்துள்ள அமுல் தனது கிளையை எப்போது வேண்டுமானாலும் திறக்கலாம். அதனால் ஆவின் நிறுவனம் மேற்கொண்டு சிக்கலுக்கு உள்ளாகலாம்.
இது பற்றி மூத்த பத்திரிகையாளர் மணி, சில கருத்துகளைக் கூறியுள்ளார். அவர் இது குறித்து ஒரு யூடியூப் தளத்திற்குப் பேட்டி அளித்துள்ளார்.
அதில் மணி, "தமிழ்நாட்டிற்குள் 'அமுல்' வருவதற்கான அனைத்து உரிமையும் உள்ளது. இது போட்டிகள் நிறைந்த வியாபார உலகம். அதை யாரும் தடுக்க முடியாது. வெளிநாட்டு நிறுவனங்களே இந்தியாவுக்குள் வரும்போது இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்திலிருந்து அமுல் தமிழ்நாட்டுக்கு வருவதற்கான உரிமை நிச்சயம் இருக்கிறது. அவர்களை யாரும் தடுக்கவே முடியாது.
ஏற்கெனவே கர்நாடகாவில் உள்ள 'நந்தினி' பால் நிறுவனத்துடன் வந்தது. அதன்பிறகு அது அடங்கிவிட்டது. கடந்த கால ஆட்சியின் போது தமிழ்நாட்டில் உள்ள ஆவின் நிறுவனம் பல நெருக்கடிகளிலிருந்தது.
அமுல் நிறுவனமே உடனடியாக தமிழ்நாட்டுக்கு வருவதற்கான திட்டத்தில் இல்லை என்றே சொல்லப்படுகிறது. அப்படி அவர்கள் வர நினைத்தால், புதிய ஆட்சி அமைத்த பிறகு முடிவுகளை எடுப்பார்கள்.

ஏனென்றால், குஜராத் நிறுவனம் அது. அங்கே இருந்துதான் உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த முறை மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், மிக எளிதாகக் கிளையைத் தமிழ்நாட்டில் அமுல் திறந்துவிடும். அதில் எந்தச் சிக்கலும் இருக்காது.
இன்னொரு விசயத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆவின் நிறுவனம் பல குளறுபடிகளில் சிக்கித் தவித்து வருகிறது. நிறைய நஷ்டத்தில் அந்த நிறுவனம் சிக்கித் தவித்து வருகிறது.
குறிப்பாக ஸ்டாலின் ஆட்சியில் ஆவின் நிறுவனத்திற்குள் நிறையப் பிரச்சினைகள் உள்ளன. கொள்முதல் தொடங்கி விற்பனை வரை எக்கச்சக்கமான பிரச்சினைகள் இருக்கின்றன. அதை முதலில் தமிழ்நாடு அரசு சரி செய்ய வேண்டும்.

அதைச் செய்யாமல் அமுல் நிறுவனம் உள்ளே வரவிடாமல் தடுப்போம் என்ற வாதம் சரியானதல்ல. இன்னும் சொல்லப் போனால் தமிழ்நாட்டு நிறுவனமான ஆவின் குஜராத்தில் கிளை திறப்பதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். அப்போது ஏதேனும் முட்டுக்கட்டை வந்தால், அமுல் உள்ளே வருவதைத் தடுப்பதில் நியாயம் இருக்கிறது.
ஆவின் தன் வளர்ச்சி பற்றி யோசிக்கவில்லை. வியாபாரத்தை ஆவின் விரிவுபடுத்தவில்லை என்றால், எதிர்காலத்தில் அது தோல்வியைச் சந்திக்கும். இன்னும் 3 ஆண்டுகளில் ஆவின் நிறுவனத்தின் செயல்பாடு கேள்விக்குறி ஆகிவிடும் என்கிறார்கள். ஒட்டுமொத்தமாக மூடிவிடுவார்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால், கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது என்கிறேன்" என்று பேசியுள்ளார் அவர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications