ஆவின் பால்.. வந்தது மாற்றம்.. "நச்" உத்தரவை பிறப்பித்த தமிழ்நாடு அரசு.. பாய்ந்து வந்த "12 அம்புகள்"
சென்னை: ஆவினில் விரைவில் மாற்றம் வரப்போவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்திருந்த நிலையில், புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிர்வாக சீரமைப்பு குறித்தும் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
தமிழக அரசுக்கு சொந்தமான ஆவினில், சுமார் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது... இதனால், ஆவின் நிறுவனம் மூலமாக நாளொன்றுக்கு சுமார் 4.30 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் சராசரியாக 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த நிறுவனம் மூலமாக பால் மட்டுமில்லாமல் தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், பால்கோவா, மைசூர்பாக், ஐஸ்கிரீம் போன்ற பால் சார்ந்த பொருள்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் அதிரடி: இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு, தமிழக அரசின் பால் நிறுவனமான ஆவினில் இனி மாற்றத்தை பார்ப்பீர்கள் என அமைச்சர் மனோ தங்கராஜ் அதிரடியாக அறிவித்திருந்தார்.. அப்போது அமைச்சர் சொல்லும்போது, "கடந்த ஆவின் நிறுவனம் மேம்பாட்டுக்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். தினசரி ஆவின் பால் கையாளும் திறன் 40 லட்சம் லிட்டர் ஆகும். இதை இந்த வருடத்துக்குள் 70 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான கட்டமைப்பு வசதிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
விரைவில் மாற்றம்: பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு தொழில் செய்ய உகந்த சூழல் ஏற்படுத்தப்படும். தினசரி 70 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறனை மேற்கொள்ளும்போது, பால் உற்பத்தி அதிகரிகரிக்க வேண்டும். இதற்காக, 2 லட்சம் கறவை மாடுகள் வழங்கப்படும். அனுமதியின்றி பால் உற்பத்தியாளர் சங்கம் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது மிகவும் ஆபத்தானது. இந்த பால் என்ன தரத்தில் கொடுக்கிறார்கள் என்பது நமக்கு தெரியாது. அதனால், அனுமதி இன்றி செயல்படுகிற அல்லது கலப்பட பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ரயில்வே நிர்வாகம்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆவின் பாலகம் அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்தோம். ரயில்வே நிர்வாகம் ஒப்பந்த தொகை மிக அதிகமாக இருக்கிறது. அதனால், தமிழக அரசு தரப்பில் இருந்து ரயில்வே நிர்வாகத்திடம் பேசி, ரயில் நிலையங்களில் ஆவின் பாலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆவினில் இனி வரும் காலங்களில், உறுதியாக மாற்றத்தை பார்க்கலாம்.. ஆவின் தண்ணீர் பாட்டில் திட்டம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்" என்று அமைச்சர் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஆவின் பணியாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று 12 உத்தரவுகளை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவுகள் இவைகள்தான்:
1. பால் கொள்முதல் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் சம்பளம் அவரவர் வங்கி கணக்குகள் மூலம் மட்டுமே வழங்க வேண்டும்.
2. பால் பதப்படுத்துதல் பேக்கேஜிங் மற்றும் லோடிங் செய்யும் இடங்களிலும் பிரதான வாயிலிலும் CCTV கண்காணிப்பை மேம்படுத்துதல்.
3. Bio Metric மூலம் பணியாளர்களின் வருகை பதிவேடு முறையாக பராமரிக்க வேண்டும்.
4. அனைத்து போக்குவரத்து வாகனங்களுக்கும் FC மற்றும் வாகனத்தின் நிலை, சுத்தம் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்தல்
5. விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் தொடங்கி BMC மற்றும் மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களுக்கு வந்தடையும் கால இடைவேளையை அதற்கு நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் வந்தடைவதை உறுதிபடுத்த வேண்டும்.
6. கூட்டுறவு பால்கொள்முதல் நிலையங்கள் தனிநபர்களுக்கு பால் விற்பனை செய்வதை நிர்ணயிக்கப்பட்ட 10% அளவிற்கு கட்டுப்படுத்த வேண்டும் முடியாத சூழலில் அவற்றை கூட்டுறவு சங்க கணக்குகளில் முறையாக பதிவு செய்ய வேண்டும்.
7. தனியார் பால் நிறுவனங்கள் அதிக விலைக்கு பால் கொள்முதல் செய்வதும் அவற்றில் சர்க்கரை, யூரியா, ஸ்டார்ச் உள்ளிட்ட பல்வேறு வேதி பொருட்கள் கலப்படம் செய்து பாதுகாப்பு விதிகளை மீறி உரிய அனுமதியின்றி பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதை தடுக்க மாவட்ட ஆட்சி தலைவர்களின் உதவியுடன் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்களுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

8. பால் பதப்படுத்துதல் மற்றும் கையாளுவதில் வரும் இழப்பை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
9. பால் உற்பத்தியாளர்களுக்கு குறித்த நேரம் தவறாமல் பணம் பட்டுவாடா செய்தல்.
10. ஆவின் அலுவலகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேவையான கணினி மற்றும் ICT பயிற்சிகளை உடனடியாக அளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
11. ஆவின் பால்பண்ணைகள் மற்றும் பார்லர்களை சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் வைத்திருக்க வேண்டும்.
12. கூட்டுறவு சங்கங்களிலிருந்து BMC-களுக்கு பால் எடுக்கப்படும் பொழுது கொழுப்பு மற்றும் இதர சத்துக்களை அந்த இடத்திலே அளவீடு செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். BMC மையங்களில் இருந்து ஒன்றியத்திற்கு பால் எடுக்கப்படும் பொழுது அங்கேயே கொழுப்பு மற்றும் இதர சத்துக்களை அந்தந்த இடத்திலே அளவீடு செய்து எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications