அமைச்சரை மாற்றியும்.. ஆவினில் தொடரும் பிரச்சினை.. சென்னையில் இன்று பால் பாக்கெட்டுகள் தாமதம்
சென்னை: ஆவின் பால் பண்ணைகளில் ஒப்பந்த தொழிலாளர்களின் வருகை குறைந்ததால் இன்றைய தினம் பால் பாக்கெட்டுகள் தாமதமாக வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
கடந்த சில நாட்களாக தொழிலாளர்கள் பற்றாக் குறை, பால் கொள்முதல் குறைவு காரணமாக பால் வினியோகம் செய்வதில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தாமதம் ஏற்பட்டது. சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர், அம்பத்தூர், காக்களூர் ஆவின் பால் பண்ணைகளில் ஒப்பந்த தொழிலாளர்கள் வருகை குறைவாக உள்ளனராம்.

அது போல் பால் பாக்கெட்டுகள் வைக்கப்படும் பிளாஸ்டிக் டப்புகளும் பற்றாக்குறையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், இன்று காலை 6:40 மணி நிலவரப்படி ஒவ்வொரு பால் பண்ணையிலும் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பால் ஏற்றப்படவில்லை. இதனால் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் பால் விநியோகத்தில் மிகவும் காலதாமதம் ஏற்பட்டது. பால் முகவர்கள் கடும் அவதியுற்றனர்.
சில இடங்களில் பால் போடும் நபர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர். சில இடங்களில் பால் பாக்கெட்டுகள் வீட்டில் உள்ளவர்கள் வேலைக்கு சென்ற பிறகே வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆவின் பால் பிரச்சினையில் ஏற்கெனவே நாசர் அமைச்சராக இருந்த போது சில அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்படியிருக்கும் பட்சத்தில் தற்போது நிர்வாக காரணத்திற்காக அமைச்சராக மனோ தங்கராஜ் பொறுப்பேற்ற நிலையிலும் ஆவின் பால் விவகாரத்தில் பிரச்சினை எழுந்துள்ளது.

சில இடங்களில் கெட்டு போன பால்பாக்கெட்டுகள் வந்ததாகவும் கடந்த மார்ச் மாதம் புகார் எழுந்தது. அது போல் பால் விநியோகிக்கும் இயந்திரங்களில் கோளாறு காரணமாகவும் பால் விற்பனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications