For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஊழல் நஷ்டத்தை சரிகட்ட பால் விலையை உயர்த்துவதா?: கேட்கிறார் விஜயகாந்த்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஆவின் நிறுவனத்தில் ஏற்பட்ட முறைகேட்ட சமாளிக்க பால் விலையை உயர்த்துவதா என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தும் இதுவரை தமிழக அரசு அனுமதி அளிக்காதது ஏன், என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பால் விற்பனை விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

Aavin Milk Price Hike DMDK Stages Protest in Chennai

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜயகாந்த், ஆவின் பாலின் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் என உயர்த்தி உள்ள தமிழக அரசின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார்.

ஆவின் பால் கலப்பட முறைகேட்டில் ஏற்பட்ட நஷ்டத்தை இந்த விலை உயர்வு மூலம் சரி செய்ய அரசு முயற்சிப்பதாக விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.

பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்வு என்பது சாதாரண விஷயமல்ல என்றும், மக்களின் சுதந்திரம் பறிபோக விடமாட்டேன் என்றும் தெரிவித்தார். இந்த பால் விலை உயர்வு சாமானிய மக்களை மிகவும் பாதிக்கும் என்றும், பால் விலை உயர்வு சுமையை தமிழக அரசு மக்கள் தலையில் ஏற்ற வேண்டாம் என்றும் கூறினார்.

இதேபோல், மின்கட்டணம் தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்கும் செயல் நாடகம் எனவும் அவர் கூறினார்.

கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தும் இதுவரை தமிழக அரசு அனுமதி அளிக்காதது ஏன்? என்றும் விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.

ஆர்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரும் அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

English summary
DMDK Party Members Stages Protest Against Aavin Milk Price Hike And Urges Government To Roll Back Price Hike at Valluvar Kottam in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X