நெல்லையில் கடத்தப்பட்ட குழந்தை 2 மணிநேரத்தில் மீட்பு: பெண் கைது
நெல்லையில் கடத்தப்பட்ட 2 வயது குழந்தையை போலீஸார் 2 மணி நேரத்தில் மீட்டனர்.
நெல்லை: நெல்லை ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் இருந்து கடத்தப்பட்ட பெண் குழந்தையை போலீஸார் இரண்டு மணிநேரத்தில் மீட்டனர்.
திருநெல்வேலி, மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். ஓட்டல் தொழிலாளி. அவரது மனைவி முத்துமாரி. இருவரும் தங்களது இரண்டு வயது மகள் ஜெயஸ்ரீயுடன் நேற்று இரவு 7 மணியளவில் நெல்லை ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டிற்கு வந்திருந்தனர்.

தீபாவளிக்கு வந்திருந்த உறவினரை சென்னைக்கு அனுப்பிவிட்டு கிளம்பும் நேரத்தில் மகள் ஜெயஸ்ரீ காணாமல் போனதை அறிந்தனர். இதுகுறித்து பஸ் ஸ்டாண்ட் புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
நெல்லை போலீஸ் உதவி கமிஷனர் மாரிமுத்து மற்றும் ஜங்ஷன் இன்ஸ்பெக்டர் உதயசூரியன் விசாரணை நடத்தினர். பஸ் ஸ்டாண்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு சிசிடிவி கேமிரா காட்சிகளை பார்த்தபோது, ஒரு பெண், சிறுமியை துாக்கிக்கொண்டு செய்துங்கநல்லூர் செல்லும் பஸ்சில் செல்வது தெரிய வந்தது.

அதிரடியாக பஸ்சை பின் தொடர்ந்து சென்ற இன்ஸ்பெக்டர் உதயசூரியன் தலைமையிலான போலீஸார் செய்துங்கநல்லூரில் குழந்தையை கடத்திய பெண்ணை வளைத்துப் பிடித்தனர்.
விசாரணையில் குழந்தையைக் கடத்திய பெண் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை அடுத்துள்ள நாட்டார்குளத்தை சேர்ந்த கோமதி என்ற கிளாடிஸ் 45, என்பது தெரிய வந்துள்ளது.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications