கவிதை உரமாய் வாழ்வார் கவிக்கோ அப்துல் ரகுமான்.. கமல்ஹாசன் புகழாரம்
கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் இரங்கல் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: உடல்நலக்குறைவால் காலமான கவிக்கோ அப்துல் ரகுமான் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் கவிதை உரமாகி தமிழாய் வாழ்வார் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சாகித்ய அகாடமி விருது வென்ற கவிக்கோ அப்துல் ரகுமான், உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை சென்னை அருகேயுள்ள பனையூரிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "அப்துல் ரஹ்மான் உயிராய்த்தான் மாண்டார், உரமாகி கவிதை மூலம் தமிழாய் வாழ்வார். என் மூலம், எனக்கும் இறங்கல் கூறப்போகும் கவி மூலம் வாழ்ந்தேதீருவர்" என்று கூறியுள்ளார்.
அப்துல் ரஹ்மான் உயிராய்த்தான் மாண்டார் உரமாகி கவிதை மூலம் தமிழாய் வாழ்வார்.என் மூலம், எனக்கும் இறங்கல் கூறப்போகும் கவி மூலம் வாழ்ந்தேதீருவர்
— Kamal Haasan (@ikamalhaasan) June 2, 2017


Click it and Unblock the Notifications
