சென்னைக்கு வந்த இடத்தில் வெள்ளத்தில் சிக்கிய நடிகர் அபிஷேக் பச்சன்
சென்னை: இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்ட போட்டிக்காக சென்னைக்கு வந்த இடத்தில் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார்.
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்ட போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதிய ஆட்டம் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. வரலாறு காணாத மழை பெய்த போதிலும் போட்டி மட்டும் நடந்துள்ளது.

சென்னை அணியின் உரிமையாளர்களில் ஒருவரும், பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சன் தனது அணியை ஊக்குவிக்க சென்னை வந்திருந்தார். கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் ரயில், விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் சிக்கிக் கொண்டார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
Thank you all for the concern. Am safe and dry. Thoughts and prayers with the people more severely affected. #ChennaiFloods
— Abhishek Bachchan (@juniorbachchan) December 2, 2015 உங்களின் அக்கறைக்கு மிகவும் நன்றி. நான் பத்திரமாக உள்ளேன். கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். #ChennaiFloods என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications