அபிராமி முதல் முறை ஓடிய போது தப்பிய குழந்தைகள்... 2-ஆவது முறையின்போது பலியான பரிதாபம்
Recommended Video

சென்னை: அபிராமி முதல்முறை வீட்டை விட்டு சுந்தரத்துடன் ஓடிய போது தப்பிய குழந்தைகள் இரண்டாவது முறை ஓடிய போது பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்த விஜயின் மனைவி அபிராமி. இவருக்கு அங்குள்ள பிரியாணி கடையில் பணிபுரியும் சுந்தரம் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.
இதனால் இரு குழந்தைகளை விஷம் வைத்து கொன்றுவிட்டார். இதையடுத்து பைக்கை கோயம்பேட்டில் விட்டுவிட்டு திருவனந்தபுரம் செல்லும் பேருந்தில் தப்பி சென்றார்.

பில் போடும் சுந்தரம்
இதனிடையே கள்ளக்காதலன் சுந்தரத்தை போலீஸார் பிடித்தனர். இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக் தகவல்கள் வெளியானது. குன்றத்தூரில் உள்ள பிரியாணி கடைக்கு விஜய் தன் மனைவி, குழந்தைகளை அழைத்து செல்வது வழக்கமாம். அப்போது அங்கு பில் போடும் சுந்தரம் இவர்களுடன் நெருங்கி பழகியுள்ளார்.

அரசல் புரசல்
வீட்டுக்கு வந்து செல்லும் அளவுக்கு குடும்ப உறுப்பினராகவே மாறிவிட்டார் சுந்தரம். இந்நிலையில் விஜய் இல்லாத சமயங்களில் வீட்டுக்கு வரும் சுந்தரத்துடன் அபிராமி உல்லாசமாக இருந்துள்ளார். இது வாடிக்கையாக நடந்ததால் இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மூலம் அரசல் புரசலாக விஜய்யின் காதுகளுக்கு எட்டியது.

காணாமல் போன அபிராமி
இதனால் அபிராமியை அவர் கண்டித்தார். இதனால் கள்ளக்காதலை வெளி இடங்களில் வளர்த்தார் அபிராமி. அடிக்கடி சுந்தரத்துடன் வெளி இடங்களுக்கு சென்று தங்கவும் ஆரம்பித்தார். சில நாட்களுக்கு முன்னர் கூட அபிராமி திடீரென காணாமல் போய்விட்டார்.

மறக்க முடியவில்லை
இதையடுத்து சுந்தரத்துடன் சென்ற அவருக்கு, " நீ போய்விட்டால் குழந்தைகளுக்கு யார் இருக்கிறார்கள். அவர்களின் எதிர்காலம் என்னவாகும். இதுபோன்று செய்வது தவறு" என்று புத்திமதி கூறி கணவருடன் சேர்த்து வைத்தனர். கொஞ்ச நாட்களுக்கு அமைதியாக இருந்த அபிராமியால் சுந்தரத்தை மறக்க முடியவில்லை.

பலியான சோகம்
இதனால் சுந்தரத்துடன் நிரந்தரமாக தங்க முடிவு செய்தார். அவ்வாறு சென்றுவிட்டால் ஏற்கெனவே நடந்தது போல் குழந்தைகளை காரணம் காட்டி மீண்டும் அழைத்து வந்துவிடுவர் என்ற யோசனையில் இருந்த அபிராமி, இதை சுந்தரத்திடம் கூறியுள்ளார். அப்போதுதான் குழந்தைகளையும் கணவரையும் கொன்றுவிடுமாறு சுந்தரம் ஐடியா கொடுத்துள்ளார். முதல் முறை ஓடிய போது தப்பிய குழந்தைகள் இரண்டாம் முறை பலியாகிவிட்ட சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications