30-ஆம் தேதியே கணவருக்கும், குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்த அபிராமி... திடுக் தகவல்
Recommended Video

சென்னை: 30-ஆம் தேதியே கணவருக்கும் குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்ததாக அபிராமி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்த விஜயின் மனைவி அபிராமி அங்குள்ள பிரியாணி கடையில் பணிபுரியும் சுந்தரம் என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் இரு குழந்தைகளை விஷம் வைத்து கொன்றுவிட்டார்.
இந்நிலையில் அவர் இன்று காலை சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக் தகவல்கள் தெரிவித்தார்.

சுந்தரம்
இதுகுறித்து அபிராமி கூறுகையில் 2 மாதமாக கள்ளக்காதலில் தீவிரமாக இருந்ததால் என்னால் விட முடியவில்லை. இதனால் என்ன செய்யலாம் என யோசித்தபோது கணவரையும் குழந்தைகளையும் கொன்றுவிடும் படி சுந்தரம் ஐடியா கொடுத்தார்.

பாலில் விஷம்
அதன்படி கடந்த 30-ஆம் தேதியே மூன்று பேரையும் கொல்ல திட்டமிட்டேன். இந்நிலையில் 30-ஆம் தேதி இரவு 3 பேருக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்தேன். மறுநாள் அனைவரும் இறந்து கிடப்பர். நாம் சுந்தரத்துடன் தப்பி எங்காவது சென்றுவிடலாம் என்றிருந்தேன்.

முத்தம் கொடுக்க சென்ற விஜய்
ஆனால் மருந்தின் வீரியம் குறைவாக இருந்ததால் மறுநாள் 31-ஆம் தேதி காலை விஜய்யும் மகன் அஜய்யும் எழுந்துவிட்டனர். ஆனால் கார்னிகா மட்டும் எழவில்லை. அவளை தொட்டு பார்த்தபோது அவள் இறந்து கிடந்தது தெரியவந்தது. அப்போது வழக்கம்போல் அலுவலகத்துக்கு கிளம்பிய விஜய், கார்னிகாவுக்கு முத்தம் கொடுக்க சென்றபோது அவரை தடுத்தேன்.

எழுந்துவிடுவாள்
குழந்தை அசந்து தூங்குகிறாள், நீங்கள் அருகே சென்றால் எழுந்துவிடுவாள் என்று கூறியதால் விஜய்யும் அதை நம்பி குழந்தையை தொடாமல் சென்றுவிட்டார் என்றார் அபிராமி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications