அபிராமியும் சுந்தரமும் முதலில் அறிமுகமானது பிரியாணி கடையில் இல்ல.. எங்கே தெரியுமா?
குழந்தைகளை கொன்ற அபிராமி தனது கள்ளக்காதலன் சுந்தரத்தை முதலில் எங்கு சந்தித்தார் என்ற தகவலை சக கைதிகளிடம் பகிர்ந்துள்ளார்.
Recommended Video

சென்னை: குழந்தைகளை கொன்ற அபிராமி தனது கள்ளக்காதலன் சுந்தரத்தை முதலில் எங்கு சந்தித்தார் என்ற தகவலை சக கைதிகளிடம் பகிர்ந்துள்ளார்.
குன்றத்தூரை சேர்ந்தவர் அபிராமி. இவரது கணவர் விஜய் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த தம்பதிக்கு 7 வயதில் விஜய் என்ற மகனும் 4 வயதில் கார்னிகா என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில் அபிராமிக்கு அப்பகுதியில் உள்ள பிரியாணிக் கடையில் வேலை செய்த சுந்தரத்துடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

சுந்தரம் ஐடியா
இதற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அபிராமி நமது உறவுக்கு கணவரும் குழந்தைகளும் தடையாய் இருப்பதாய் கூறினார். இதனைக் கேட்ட கள்ளக்காதலன் சுந்தரம் குழந்தைகளையும் கணவரையும் கொன்றுவிட்டால் நாம் சந்தோஷமாக இருக்கலாம் என கூறி அபிராமிக்கு ஐடியா கொடுத்தார்.

வேட்டையை தொடங்கிய அபிராமி
சுந்தரத்தின் ஆலோசனைப்படி கடந்த 30 ஆம் தேதி இரவு தனது வேட்டையை தொடங்கினார் அபிராமி. பாலில் பெண்கள் பயன்படுத்தும் மாத்திரைகளை கலந்து மொத்த குடும்பத்துக்கும் கொடுத்தார்.

மகன் கொலை
இதில் முதலில் பலியானது அவரது 4 வயது மகள் கார்னிகா. கணவரும் மகனும் பிழைக்கவே கணவர் விஜய் வேலைக்கு சென்ற பிறகு மகனை படுக்கையறைக்கு அழைத்து மூச்சை திணறடித்து கொன்றார் அபிராமி.

பதற்றம் இன்றி உல்லாசம்
இரவு கணவருக்காக காத்திருந்த அபிராமி அவர் இரவு அலுவலகத்திலேயே தங்கியதால் இரவு சுந்தரத்திற்கு போன் செய்து விஷயத்தை கூறியுள்ளார். சுந்தரம் அழைத்ததை தொடர்ந்து இரவு அவரை சந்திக்க சென்ற அபிராமி குழந்தைகளை கொன்ற பதற்றம் கொஞ்சமும் இன்றி விடியும் வரை அவருடன் உல்லாசம் அனுபவித்துள்ளார்.

விஷயம் தெரிந்த போலீசார்
பின்னர் நாகர்கோவில் புறப்பட்ட அவர் அங்கிருந்த கேரளா சென்றார். அதற்குள் விஷயம் தெரிந்த போலீசார் சுந்தரத்தை கைது செய்தனர். மேலும் அவரை வைத்தே அபிராமியை பிடித்தனர்.

வாய் திறந்த அபிராமி
இதில் குழந்தைகளை கொன்றதை ஒப்புக்கொண்ட அபிராமி தற்போது புழல் சிறையில் அழைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறையில் உள்ள சகக் கைதிகளிடம் பேச தொடங்கியுள்ள அபிராமி சுந்தரத்துடன் கள்ளக்காதல் மலர்ந்தது குறித்து பேசியுள்ளார்.

சந்தரம் அறிமுகம்
பிரியாணிக் கடை ஊழியரான சுந்தரம் தமக்கு முதலில் அறிமுகமானது மியூசிக்கல் ஆப்பில்தான் என தெரிவித்துள்ளார். மியூசிக்கல் ஆப்பில் அவருடன் ரொமான்டிக் பாடல்களுக்கு சினிமா நடிகைகளை மிஞ்சும் வகையில் நடித்துள்ள வீடியோக்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications