கடைசியில் இப்படி 'ஏ.சி'யை சொல்லாம கொள்ளாம 'ஆப்' பண்ணிருச்சே பாஜக!
சென்னை: நான் பாவம்.. இப்படித்தான் ஏ.சி.சண்முகம் தனக்குத்தானே புலம்பியிருக்கக் கூடும். காரணம், பாஜக கூட்டணியில் சேர அவராகவே வாலண்டியராக வந்தார். அவரையும் வரவேற்று பாஜகவும் சில சுற்றுப்பேச்சுவார்த்தையும் நடத்தியது. ஆனால் கடைசியில் சீட்டே கொடுக்காமல் சத்தமில்லாமல் ஏசிஎஸ்-ஐ மறந்து விட்டார்கள்.
தனக்கென ஒரு வாய்ப்புக்காக, அங்கீகாரத்துக்காக ஏசிஎஸ் ரொம்ப காலமாகவே அல்லாடி வருகிறார். ஆனாலும் அவரை ஒரு சக்தியாகவே யாரும் பார்க்க மாட்டேன் என்கிறார்கள். அதுதான் அவரது கட்சிக்கு ரொம்பக் கஷ்டமான விஷயம்.
கடந்த முறை அதிமுக, திமுக என சரமாரியாக அலை பாய்ந்த கட்சிதான் இந்த புதிய நீதிக் கட்சி. ஆனால் எங்குமே உரிய மரியாதை கிடைக்கத்தான் இல்லை. இந்த நிலையில் பாஜக கூட்டணியில் கூட்டமே இல்லை. எப்படியாவது ஒரு சீட்டைப் பிடித்து விடலாம் என்ற நப்பாசையில் இருந்தார். ஆனால் ஒன்றும் பெயராமல் போய் விட்டது.

எம்.ஜி.ஆர். காலத்து அரசியல்வாதி
எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதி என்று சொல்வதையே பெருமையாக நினைப்பவர்கள் பலர் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் சண்முகம். எம்.ஜி.ஆர். காலத்தில் எம்.பியாக இருந்தவர்.

கல்லூரி பக்கமாக ஒதுங்கினார்
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு தனது சம்பாத்தியத்தை அப்படியே கல்லூரி கட்ட ஒதுக்கினார். எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தை நிறுவினார்.

பிரபலமானதோடு பிரச்சினையும் வளர்ந்தது
அவரது கல்வி நிறுவனம் பிரபலமானதோடு, பிரச்சினைகளையும் சந்திக்க ஆரம்பித்தது. கூவத்தை ஆக்கிரமித்துக் கட்டடம் கட்டியதால் கார்ப்பரேஷன் காரர்கள் பொக்லைனோடு வந்து இடித்துத் தள்ளினர் ஒரு பகுதியை.

பிரச்சினை வந்தா எங்க போகனும்...
பிரச்சினை வந்தால் ஒன்று சாமியிடம் போவார்கள் அல்லது சாமியாரிடம் போவார்கள்.. சிலர் மட்டும்தான் வித்தியாசமாக அரசியலுக்கு வருவார்கள். ஏ.சி.சண்முகமும் அப்படித்தான் வந்தார். புதிய நீதிக் கட்சி என்ற பெயரோடு.

முதலியார் -பிள்ளைமார் - வேளாளர்
முதலியார், பிள்ளைமார், வேளாளர் சமூகத்தின் ஒன்றுபட்ட சக்தி தான்தான் என்று கூறிக் கொண்டார். செயல்படவும் தொடங்கினார். அதிமுகவுடன் கூட்டணி வைத்தார். திமுக பக்கம் போனார்.

பாஜகவிடம் பெரும் நம்பிக்கை
இந்த நிலையில்தான் பாஜகவை இந்த முறை நிறையவே நம்பியிருந்தார். எப்படியும் 2 சீட் வாங்கி விட வேண்டும் என்று ஆவலோடு இருந்தார். 2 இல்லாவிட்டாலும் வேலூரை மட்டுமாவது தருவார்கள் என்று ரொம்ப நம்பியிருந்தார்.

வேலூரை ஆட்டையைப் போட்ட பாஜக
ஆனால் வேலூரை யாருக்கும் கொடுக்காமல் தனக்கே எடுத்துக் கொண்டு விட்டது பாஜக.

இல. கணேசனை நம்பியும் புண்ணியம் இல்லையே
இல.கணேசன், எப்படியும் தனக்கு சீட் வாங்கித் தந்து விடுவார் என்று ஏ.சி.சண்முகம் ரொம்ப நம்பிக்கையாக இருந்தார். ஆனால் தேமுதிக, பாமகவிடம் சிக்கி பாஜக பட்ட பாட்டில் ஏ.சி.சண்முகம் எல்லாம் எந்தி் மூலைக்கு.. கடைசி வரை சீட் குறித்த பேச்சையே எடுக்கவில்லை பாஜக.

வாய்ப்பே இல்லை
தற்போது எல்லாம் முடிந்து அவரவர் பாட்டுக்குப் போய் விட்டார்கள்... பாவம் ஏ.சி.சண்முகம்தான் எங்கு போவது என்று தெரியாமல் விழித்து நிற்கிறார்....
பாவமாகத்தான் இருக்கிறது...!
-
எடப்பாடி பழனிசாமி பட்ட பாடெல்லாம் போச்சா? தவெக மூலம் தொங்கு சட்டசபை? கிங் மேக்கர் ஆக துடிக்கும் பாஜக -
தாமரை மலர்கிறது? மம்தாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பாஜக.. புதிய தேர்தல் சர்வேயில் மிக பெரிய ட்விஸ்ட்! -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
சீனியர்களை கழற்றிவிடும் பாஜக? தமிழகத்தில் புதுமுகங்களை களமிறக்க திட்டம்.. பின்னணியில் 3 காரணம் -
118-க்கு செக் வைக்கும் பாஜகவின் 130 கணக்கு! ஒரே கல்லில் 2 மாங்கா.. அதிமுகவுக்கு ஆப்பு வைக்குதா தாமரை -
பாஜகவின் "பெரிய அசைன்மெண்ட்".. தடையாய் நிற்கும் சைலண்ட் கில்லாடி? விஜய்யின் இமேஜ் மேக்ஓவர் சிதையுமா? -
பாஜக கூட்டணிக்கு விஜய் வருவாரா? டெல்லி தலைமை முடிவு செய்யும்.. நயினார் நாகேந்திரன் சூசக பதில்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு?












Click it and Unblock the Notifications