நெல்லை நான்கு வழி சாலையில் ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்து
நெல்லையில் நான்கு வழி சாலையில் ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
நெல்லை: நெல்லை அருகே அடுத்தடுத்து இரு ஆம்னி பேருந்துகள் கவிழ்ந்ததால் அங்கு பதற்றம் உருவாகியுள்ளது.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் 18-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வெளியூரில் பணி செய்பவர்கள், கல்லூரி, பள்ளிகளில் படிப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். இதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சுமார் 3 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இது போல் தனியார் பஸ்களும் நெடுந்தூரத்துக்கு இயக்கப்பட்டு வருகிறது. சென்னையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு தனியார் பேருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.30 மணிக்கு நெல்லைக்கு வந்தது.
இந்த பேரூந்து கங்கைகொண்டான் நான்குவழிசாலையில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாரவிதமாக சாலையின் ஓரத்தில் இருந்த சென்டர் மீடியனில் ஏறியது. சுதாரித்த டிரைவர் பிரேக்கை போடுவதற்குள் பஸ் கவிழ்ந்தது.
அதிகாலை என்பதால் நீண்ட உறக்கத்தில் இருந்த பயணிகள் அலறல் சத்தம் எழுப்பினர். உடனடியாக நெடுஞ்சாலை மீட்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு பயணிகள் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த பஸ்சை பின் தொடர்ந்து சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு வந்த தனியார் பேருந்தும் விபத்து நடந்த இடத்தின் அருகே திடீரென கவிழ்ந்தது. அந்த பஸ்சில் பயணம் செய்த 7 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த பகுதியில் லேசான சாரல் மழை பெய்ததால் சாலை ஈரமாக இருந்தது. இரு பஸ்களும் திடீரென பிரேக் பிடித்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த விபத்தால் போக்குவரத்து மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications