கூவத்தூரை விட்டு கிளம்பினார் சசிகலா.. கூடவே தினகரனும்!
கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து முகாமிட்டுள்ள நிலையில் அங்கிருந்து சசிகலா இன்று இரவு புறப்பட்டார்.
சென்னை: பெரும் பதட்டமான சூழலில் சசிகலா கூவத்தூர் ரிசார்ட்டை விட்டு கிளம்பினார். அவருடன் அக்காள் மகன் தினகரனும் புறப்பட்டார். அவர்கள் போயஸ் கார்டனுக்குச் செல்வதாக தெரிகிறது.
சென்னையை அடுத்த கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்எல்ஏக்களை சிறை வைத்துள்ள சசிகலா நேற்றிரவு முதல் தானும் அங்கேயே தங்கியிருந்தார். இன்று சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரையும் உடனடியாக சரணடைய ஆணையிட்டது.

ஆனால் சசிகலா இதுவரை சரணடையவில்லை. மேலும் தான் தங்கியிருந்த போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டிற்கும் அவர் திரும்பாமல் இருந்தார். அஏவர் வெளியேறுவாரா இல்லையா என்பதும் கேள்விக்குறியானது. இந்த நிலையில் ரிசார்ட்டைச் சுற்றிலும் போலீஸார் குவிக்கப்பட்டனர். ரிசார்ட்டில் உள்ள அதிமுகவினர் வெளியேற மறுப்பதால் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு ஆயிரம் போலீசாரும் 500 அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று இரவு கூவத்தூரை விட்டு சசிகலாவும், தினகரனும் அங்கிருந்து புறப்பட்டனர். அவர்கள் போயஸ் கார்டன் புறப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications