இன்று சரணடைகிறார் தலைமறைவு குற்றவாளி யுவராஜ்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: சிபிசிஐடி போலீஸ் முன்பு இன்று சரண் அடையப்போவதாக கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளி யுவராஜ், வாட்ஸ் ஆப் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

தலித் இளைஞர் கோகுல் ராஜ் கொலை வழக்கு மற்றும் டிஎஸ்பி விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கை இணைத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சேலம் ஆவாரம்பாளையத்தில் உள்ள யுவராஜின் வீடு, சங்ககிரியில் உள்ள அவரது சகோதரர் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் நேற்று சி.பி.சி.ஐ.டி போலீசார் சோதனை நடத்தினர்.

Accused Yuvaraj will surrender Tomorrow

அப்போது யுவராஜ் மனைவி பயன்படுத்திய செல்போன், உறவினரிடம் இருந்த ஒரு செல்போன், யுவராஜின் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள், கணினியின் ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை சி.பி.சி.ஐ.டி போலீசார் எடுத்துச் சென்றனர்.

இந்நிலையில் ஞாயிறு காலை 10.30 மணிக்கு நாமக்கல் சிபிசிஐடி போலீஸில் நாளை சரண் அடையப்போவதாக யுவராஜ் அறிவித்துள்ளார். வாட்ஸ் ஆப் மூலம் இந்த தகவலை வெளியிட்டு உள்ள யுவராஜ், தான் கோர்ட்டில் சரணடையப் போவதில்லை என்றும் நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் எஸ்.பி.அன்பு, எஸ்.பி.நாகஜோதி முன் சரண் அடைய உள்ளதாக கூறியுள்ளார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீஸ் விசாரணை சரியான வழியில் செல்வதால் சரணடைய முடிவு செய்திருப்பதாகவும் யுவராஜ் தெரிவித்துள்ளார். சட்டத்திற்குப் புறம்பாக சிபிசிஐடி போலீசார் நடந்து கொள்ளவில்லை என்றும் தனது மனைவி மற்றும் உறவினர்களை துன்புறுத்தவில்லை என்றும் எனவே இதுவே தான் சரணடைய சரியான தருணமாக கருதுவதாகவும் யுவராஜ் தனது அடியோவில் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+