அம்பத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா மீது மர்மநபர்கள் ஆசிட்முட்டை வீச்சு
சென்னை: சென்னை அம்பத்தூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரின் கார் மீது ஆசிட் முட்டை வீசப்பட்டதாகக் கூறி, காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அம்பத்தூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. அக்கட்சியின் சார்பில் மக்களவை முன்னாள் உறுப்பினர் ஆரூண் மகன் அசன் மவுலானா போட்டியிடுகிறார். இந்நிலையில் வாவின் பகுதியில் பிரசாரத்தை முடித்துவிட்டு, அத்திப்பட்டு செல்வதற்காக கட்சியினருடன் தனது காரில் புறப்பட்டு சென்றுள்ளார்.

அம்பத்தூர் இரட்டை மேம்பாலம் அருகே சென்றபோது, அப்பகுதியில் உள்ள மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது, மேம்பாலத்திலிருந்து மர்மநபர்கள் சிலர் ஆசிட் கலந்த முட்டையை அசனின் காரின் மீது வீசினராம். இதையடுத்து கார் ஓட்டுநர் காரை நிறுத்தி கதவை திறந்துள்ளார்.
அப்போது ஏற்பட்ட ஆசிட் நெடியால், அசன் மவுலானா மற்றும் காரில் இருந்தவர்கள் மயக்கமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காங்கிரஸ் வேட்பாளர் தாக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்த திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சிறிது நேரம் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications