செங்கோட்டையில் சாலையில் ஆறாக ஓடிய ஆசிட்
செங்கோட்டை: செங்கோட்டையில் இன்று லாரியிலிருந்து ஆசிட் கசிந்து சாலையில் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு இன்று ஹைட்ரோ குளோரின் ஆசிட் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. ஆறுமுகநேரியைச் சேர்ந்த சங்கர் என்பவர் லாரியை ஓட்டினார்.

செங்கோட்டை வாஞ்சிநாதன் சிலை அருகே வரும்போது லாரியின் இரண்டு பகுதிகளில் இருந்து கசிவு ஏற்பட்டது. இதையடுத்து ஆசிட் சாலையில் கொட்டி ஆறாக ஓடியது. அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் உடனடியாக டிரைவருக்கு தெரியபடுத்த அவர் உடனடியாக லாரியை சாலை ஓரத்தில் நிறுத்தினார். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினரும், போலீசாரும் விரைந்து வந்து லாரி ஓட்டுனரிடம் விசாரணை நடத்தினர்.
இதன் காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் லாரியில் இருந்து கொட்டிய "ஹைட்ரோ குளோரின்" ஆசிட் அருகில் மக்கள் பயன்படுத்தும் நீர் ஓடையில் கலந்து வருவதால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து லாரியை அப்புறப்படுத்தும் முயற்சியில் தென்காசி கோட்டாட்சியர் வெங்கடேஷ், துணைக் கண்காணிப்பாளர் சசாங் சாய் தலைமையில் போலீசாரும், வருவாய்த் துறையினரும் ஈடுப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications