பெண் போலீஸ் மீது ஆசிட் வீச்சு.. கள்ளக்காதலன் கைது! பரபரப்பு வாக்குமூலம்
வேலூர் அருகே பெண் போலீஸ் மீது ஆசிட் வீசியது அவரது கள்ளக்காதலன் என தெரியவந்துள்ளது. பெண் போலீஸ் மீது ஆசிட் வீச வேறுறொரு போலீஸ்காரர் திட்டம் போட்டுக்கொடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வேலூர்: வேலூர் அருகே பெண் போலீஸ் மீது ஆசிட் வீசிய விவகாரத்தில் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். பல ஆண்களுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டதால் முகத்தில் ஆசிட் வீசயதாக அவர் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த குரிசிலாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த லாவண்யா திருப்பத்தூர் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சுரேஷ் என்ற கணவரும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

இவர் கடந்த 23 ஆம் தேதி திருப்பத்தூர் காவலர்கள் குடியிருப்பு அருகே சென்றபோது மர்ம நபர்கள் லாவண்யாவின் முகத்தில் ஆசிட் வீசினர். இதில் முகம் மற்றும் கைகள் வெந்த நிலையில் லாவண்யா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில் பிரபாகரன் என்வரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் பிரபாகரனுக்கும் பெண் போலீஸ் லாவண்யாவுக்கும் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்துள்ளது. கடந்த சில மாதங்களாக லாவண்யா பிரபாகரனிடம் சரிவர பேசாமல் வேறு பல ஆண்களுடன் தொடர்பில் இருந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன் தனது நண்பர்களிடம் லாவண்யா தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி புலம்பியுள்ளார். இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி பிரபாகரனை போனில் தொடர்பு கொண்ட லாவண்யா தன்னை வீட்டில் கொண்டு போய்விடும்படி கூறியுள்ளார்.
அதற்கு உன் அண்ணன் வீட்டில் இருந்து வந்து அழைத்து செல்கிறேன் என்று கூறிய பிரபாகரன், அவர் செல்லும் வழியில் தனது நண்பர்களை அனுப்பி ஆசிட் வீசச்செய்ததாக தெரிவித்துள்ளார். லாவண்யா மீது ஆசிட் வீச, திருப்பத்தூரைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் தான் பிளான் போட்டு தந்ததும் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக விசாரித்து வரும் போலீசார் தலைமறைவாக உள்ள பிரபாகரனின் நண்பர்கள் இருவரை தேடி வருகின்றனர். கள்ளக்காதலனே பெண் போலீஸ் மீது வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!











Click it and Unblock the Notifications