கடைசிவரை அஜித்துக்கு துணையாக நின்று நெகிழ வைத்த பெசன்ட் ரவி.. “தங்கம்”.. உருக்கமாக பேசியது தெரியுமா?
சென்னை : நடிகர் அஜீத்தின் தந்தை சுப்பிரமணி இன்று காலமான நிலையில், அஜித் குடும்பத்தினருக்கு பக்கபலமாக நின்று உடல் தகனம் செய்யப்படும் வரை பல்வேறு உதவிகளைச் செய்தார் நடிகர் பெசண்ட் ரவி.
அஜீத்துடன் பல படங்களில் நடித்துள்ள பெசன்ட் ரவி, இன்று அஜித்தின் வீடு தொடங்கி, அஜித்தின் தந்தை தகனம் செய்யப்பட்ட பெசண்ட் நகர் மின் மயானம் வரை ஓடி ஓடி வேலை பார்த்தார்.
முக்கிய பிரமுகர்கள் வந்தபோதும், அஜித்தின் தாயார் உள்ளிட்ட குடும்பத்தினர் வந்தபோதும் முன்னே நின்று உதவினார் நடிகர் பெசன்ட் ரவி. இதனைக் குறிப்பிட்டு அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நெகிழ்ந்துள்ளனர்.

அஜீத் தந்தை மறைவு
தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் அஜித் குமார், தனது குடும்பத்தினருடன் சென்னை திருவான்மியூர் அருகே ஈஞ்சம்பாக்கத்தில் வசித்து வருகிறார். அஜித்தின் தந்தை பி.சுப்பிரமணி, கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில், இன்று காலை அவர் திடீரென மரணமடைந்தார். இது அஜித் குடும்பத்தினர், திரையுலகினர், அவரது ரசிகர்கள் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கலங்கிய அஜீத்
அஜீத்தின் தந்தை சுப்பிரமணியத்தின் மறைவையடுத்து தமிழ் திரையுலக பிரபலங்கள் ஏராளமானோர் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் பல அரசியல் பிரபலங்களும், சினிமா பிரமுகர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தனர். அஜித்குமார் தந்தையின் இறுதிச் சடங்குகள் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடைபெற்றது. இறுதிச் சடங்குகள் நடைபெறும் முன் தனது தந்தையின் உடலை சுமந்து சென்ற அஜித் குமார் கண் கலங்கியவாறு சென்றது அனைவரையும் கலங்கச் செய்தது.

ஓடி ஓடி வேலை செய்த பெசன்ட் ரவி
நடிகர் அஜீத் குமாரின் தந்தை மரணத்தைத் தொடர்ந்து, நடிகரும், அஜித்தின் நண்பருமான பெசன்ட் ரவி, அஜீத்தின் வீட்டில் அனைத்து பணிகளையும் முன்னின்று செய்தது காண்போரை நெகிழச் செய்தது. அஜீத்தின் தாயார் நடக்க முடியாமல் நடந்து வந்தபோது, அவருக்கு உதவியாக நின்று அழைத்துச் சென்றார் பெசன்ட் ரவி. அப்போது மட்டுமல்லாமல், இன்று காலை முதல், அஜீத்தின் தந்தை உடல் தகனம் செய்யப்படும் வரை கடைசி வரை அஜீத்துக்கு துணையாக பக்க பலமாக நின்றார் பெசன்ட் ரவி.

இருவரும் மெக்கானிக்
தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் எதிர்மறை வேடங்களில் நடித்துள்ள பெசன்ட் ரவி, நடிகர் அஜீத்துக்கு நெருக்கமானவர். அஜீத்தைப் போலவே, தனது ஆரம்பகால வாழ்க்கையை மெக்கானிக்காக தொடங்கியவர். சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார், சினிமா ஆர்வத்தில், திரையுலகிற்குள் நுழைந்து சண்டைக் கலைஞராகவும், வில்லன் வேடத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் அஜித் உடனும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் பெசன்ட் ரவி. அந்த நட்பின் அடிப்படையில் இன்று அஜித்துக்கு துணையாக நின்று அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்துள்ளார் பெசண்ட் ரவி.

அஜித்னே கூப்பிடுங்க
நடிகர் பெசன்ட் ரவி, நடிகர் அஜித் குறித்து பல இடங்களில் நெகிழ்ச்சியாகப் பேசி இருக்கிறார். முன்பு ஒரு பேட்டியின்போது பெசன்ட் ரவி, "நான் அஜித் சார்ன்னு கூப்பிட்டுட்டு இருந்தேன். என்னை அஜித்ன்னே கூப்பிடுங்க என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.. இவ்ளோ வளர்ந்தும் அஜித்ன்னு தான் கூப்பிட சொல்லுவாரு. அது எல்லாம் எங்களுக்கு கிடச்ச கிஃப்ட்ன்னு தான் சொல்லணும். ஒரு தடவை அஜித் சார் கேரவனும், என் கேரவனும் பக்கத்துல பக்கத்துல நின்னுட்டு இருந்துது. அப்போ என் கேரவன்ல கோளாறு ஏற்பட்டு கரென்ட் போய்டுச்சு.

தங்கம்
அஜித் சார் கேரவன்ல கரென்ட் இருந்துச்சு. இந்த விஷயம் தெரிஞ்சதும் என்னை அவரு கேரவன்ல கூப்பிட்டு அவரு சேர்ல உக்கார வெச்சு ரவிக்கு இங்கேயே மேக்கப் போடுங்கன்னு சொன்னாரு. அந்த டைம்ல எனக்கு டீ போட்டு கொடுத்தாரு. மேக்கப் போட்டு நான் குடிக்குறதுக்குள்ள டீ ஆறிடுச்சு. அப்போ இன்னொரு டீ போட்டு கொடுத்தாரு. அந்த அளவுக்கு அஜித் சார் மனசு தங்கம்" என மனம் நெகிழ்ந்து பேசியிருக்கிறார் பெசன்ட் ரவி. அஜித் குடும்பத்தினருக்கு துணையாக நின்று பெசண்ட் ரவி இன்று பணியாற்றியது அஜித் ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications