விவசாயிகளின் குரலுக்கு வலுசேருங்கள்... நடிகர் கமல் வேண்டுகோள் #Indebted2farmers
விவசாயிகளின் குரலுக்கு வலு சேர்க்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: விவசாயிகளின் குரலுக்கு வலு சேர்க்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் சில தினங்களாக களத்துக்கே சென்று மக்களையும், விவசாயிகளையும் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ள கமல், கடந்த சில நாள்களுக்கு முன்பு எண்ணூர் கழிமுகப் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து விவசாயிகளையும் அவர் சந்தித்து பேசினார். இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்துக்கு குரல் சேர்க்க வேண்டும் என நடிகர் கமல் டுவிட்டரில் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிடுகையில், விவசாயிகளுக்கு கடன் படாதவர் யார்? அவர்கள் குரல் வலுப்பெறச் செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
Truly indebted to the farmers of India. Strengthen their voice.
— Kamal Haasan (@ikamalhaasan) November 16, 2017
விவசாயிகளுக்கு கடன் படாதவர் யார்? அவர்கள் குரல் வலுப்பெறச் செய்யுங்கள். pic.twitter.com/Np7Jn2sd7N












Click it and Unblock the Notifications