அசோகமித்ரனின் படைப்புகள் காலம் கடந்து நிற்கும்.. நடிகர் கமல் டுவிட்டரில் இரங்கல்
முதுபெரும் எழுத்தாளர் அசோகமித்ரன் நேற்று இயற்கை எய்தினார். அவரது படைப்புகள் காலம் கடந்து தமிழ் எழுத்துலகில் நிற்கும் என்று நடிகர் கமலஹாசன் டுவிட்டர் பக்கத்தில் தனது இரங்கலை பதிவிட்டுள்ளார்.
சென்னை: முதுபெரும் எழுத்தாளரான அசோகமித்ரன் தமிழ் எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர். அவரது மறைவிற்கு எழுத்தாளர்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் கமலஹாசன் அசோகமித்ரனின் மறைவிற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ''அசோகமித்ரனின் படைப்புகள் காலம் கடந்து தமிழ் எழுத்துலகில் நிற்கும். அவரை வாசித்து, நேசித்து, சந்தித்து, பெருமை பெற்றவர்களில் நானும் ஒருவன். நன்றி அவரது படைப்புகளுக்கு,'' என்று குறிப்பிட்டுள்ளார்.

86 வயதான அசோகமித்திரன், நாவல்கள், சிறுகதைகள் என தனது படைப்புகள் மூலம் தமிழ் எழுத்துலகின் வாசகர்களை தனது வசமாக்கிக் கொண்டனர். உடல்நலக்குறைவால் நேற்று அவர் சென்னையில் காலமானார்.
இதே போன்று எழுத்தாளர் அசோகமித்திரன் மறைவுக்கு எழுத்தாளர் ஜெயமோகன், தனது இரங்கலை தெரிவித்துள்ளார். 'நவீனத் தமிழ் மேதைகளில் ஒருவர் இன்று மறைந்தார். அஞ்சலி என்பதற்கு அப்பால் சொல் ஒன்றுமில்லை' என்று தனது இணையதள பக்கத்தில் ஜெயமோகன் பதிவிட்டுள்ளார்.
திரு. அசோகமித்ரனின் எழுத்து அவர் காலமும் கடந்து வாழும். அவரை வாசித்து நேசித்து சந்தித்த பெருமை பெற்றவன் நான் .நனறி அமரர் அனந்துவிற்கு.
— Kamal Haasan (@ikamalhaasan) March 23, 2017
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications