மக்களே... கவனிங்க.. முழு நேர அரசியல்வாதியாகப் போகிறாராம் கார்த்திக்!
சென்னை: நடிகர் கார்த்திக் செம வித்தியாசமானவர். சிறப்பான நடிப்புக்குப் பெயர் போன அவர், அரசியலில்தான் பெரியஅளவில் சறுக்கி விட்டார். ஆனாலும் மனிதர் அரசியலை விடுவதாக இல்லை. முழு நேர அரசியல்வாதியாகப் போவதாக தற்போது அறிவித்துள்ளார்.
தேர்தலின்போது மட்டுமே தீவிர அரசியல்வாதியாக வலம் வரும் வழக்கம் உடையவர் கார்த்திக். அதுவும் கூட திடீரென வருவார், திடீரென காணாமல் போய் விடுவார். வேட்பாளர்களை அறிவிப்பார். அவர்களை யாராவது கடத்தி விடுவார்கள். அத்தோடு காணாமல் போய் விடும் கார்த்திக்கின் அரசியல்.
இதுதொடர்கதையாக தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் முழு நேர அரசியல்வாதியாக மாறப் போவதாக அறிவித்துள்ளார் கார்த்திக். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார் கார்த்திக். அப்போது இதைத் தெரிவித்தார். அவரது பேட்டியிலிருந்து சில துளிகள்:

பார்ட் டைம் அரசியல்
நான் இதுவரை முழு நேர அரசியல்வாதியாக இருந்ததில்லை. பார்ட் டைம் அரசியல்வாதியாகவே இருந்துள்ளேன். அதிலும் சமீபத்தில் அரசியலை விட்டு விலகி நிற்கிறேன்.

ரஜினி கமலும் பார்ட் டைம்தான்
நான் மட்டும் இல்லை, ரஜினி, கமல் கூட பார்ட் டைம் அரசியல்தான் செய்து வருகின்றனர். அவர்களும் முழு நேர அரசியல்வாதியாக வேண்டும். நானும் விரைவில் முழு நேர அரசியல்வாதியாக என்னைப் பார்க்கலாம். எல்லா ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.

அனைவரும் புல் டைம் ஆவோம்
நான் மட்டுமல்ல, ரஜினி,கமலும் கூட சினிமாவில் நடிப்பதை விட்டு விட்டு முழு நேர அரசியல் செய்ய முன்வர வேண்டும் என்றார் கார்த்திக். சரணாலயம் என்ற அமைப்பை நடத்தி வந்தவர் கார்த்திக். அப்போது அவருக்குக் கூடிய கூட்டத்தைப் பார்த்து தமிழகமே ஆச்சரியப்பட்டது.

அரசியலில் குழப்பம்
இதையடுத்து அவர் பார்வர்ட் பிளாக் கட்சியில் இணைந்தார். ஆனால் அங்கு சரிவர செயல்படவில்லை. இதனால் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். தனிக் கட்சி கண்டார். அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியை தொடங்கி நடத்தி வந்த அவர் அதையும் சரியாக நடத்தவில்லை.

தெளிவாக இருப்பாரா
இந்த நிலையில்தான் தற்போது முழு நேர அரசியல்வாதியாக மாறப் போவதாக கார்த்திக் கூறியுள்ளார். இந்த முறையாவது சீரியஸாக அவர் அரசியலில் ஈடுபடுவாரா அல்லது மறுபடியும் குழப்புவாரா என்பதை போகப் போகத்தான் பார்க்க வேண்டும்.
-
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா?












Click it and Unblock the Notifications