மது போதையில் கார் ஓட்டிய மனோஜ் மீது வழக்கு.. பிஎம்டபிள்யூ சொகுசு கார் பறிமுதல்
Recommended Video

சென்னை: இயக்குனர் பாரதிராஜா மகன் நடிகர் மனோஜ் மீது குடி போதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் அவரின் சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.
இயக்குநர் பாரதி ராஜா மகன் மனோஜ், தாஜ்மகால், அல்லி அர்ஜுனா, அன்னக்கொடி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், நுங்கம்பாக்கம் காவல் சரகத்திற்கு உட்பட்ட, ஸ்டெர்லிங் ரோட்டில் மனோஜ் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ சொகுசு காரை ஓட்டி சென்றுள்ளார். அப்போது, வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் மனோஜ்குமார் வாகனத்தை தடுத்து நிறுத்தி, விசாரணை நடத்தினர்.

இதில் அவர் மது அருந்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது காரை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
பாரதிராஜா தற்போது திரைப்படங்களில் கவனம் செலுத்துவது குறைவு. தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை என்ற அமைப்பை நிறுவி, தமிழக பிரச்சினைகள் தொடர்பாக குரல் கொடுத்து வருகிறார். இதில் பல கலைஞர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். ஐபிஎல் போட்டித் தொடரின்போது, சென்னையில் இருந்து வேறு நகரத்திற்கு போட்டிகளை மாற்ற வேண்டும் என்று நடந்த பிரமாண்ட போராட்டத்தின்போது பாரதிராஜா மற்றும் அவர் அமைப்பும் பங்கேற்றது. இந்த நிலையில், மனோஜ் சர்ச்சையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications