நாளை ரத்த தானம்.. இன்று சுத்த தானம்: ரத்தத்தின் ரத்தங்களுக்கு பார்த்திபன் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனக்களிம்பு என்ற பெயரில் மருத்துவ முகாம், மனநல ஆலோசனைகள் வழங்குவதற்கு நடிகர் பார்த்திபன் ஏற்பாடு செய்துள்ளார். இந்த முகாமுக்கு ரத்த தானம் செய்ய வருவோர், இரவில் மது குடிக்காமல் இருக்குமாறு பார்த்திபன் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதுவும், அவருக்கே உரித்தான பாணியில்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 'மனக்களிம்பு' என்ற பெயரில் மருத்துவ முகாம், மனநல ஆலோசனைகள் வழங்குவதற்கு நடிகர் பார்த்திபன் ஏற்பாடு செய்துள்ளார். மருத்துவமுகாம், மன நல ஆலோசனைகள், ரத்ததான முகாம், மேடையில் ஊக்க உணவு போன்றவை வழங்கப்பட உள்ளது.

Actor Parthiepan requested blood donars not to drink liquor

நாளை, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு முகாம் தொடங்குகிறது. நேரில் சென்று முன்பதிவு செய்யலாம்.வட பழனியில் கமலா திரையரங்கம் அருகிலுள்ள, என்.எஸ்.கே சாலையிலுள்ள, திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம் மற்றும் அறக்கட்டளை அமைந்துள்ள இடத்தில்தான் இந்த முகாம் நடக்கிறது.

044-23651311 அல்லது 9566049610 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெறலாம்.

இந்த முகாமுக்கு ரத்த தானம் செய்ய வருவோர், மது குடிக்காமல் வர வேண்டும் என்பதை, நாசூக்காக அன்பு வேண்டுகோளாக தனது பேஸ்புக் வழியாக கேட்டுக்கொண்டுள்ளார், பார்த்திபன்.

நாளை ரத்த தானம் செய்பஇன்று சுத்த பானம் (நீர்)மட்டுமே அருந்த வேண்டும்தண்ணீ' கூடாது.இந்த பதிவைபகலிலேயே போடக் காரணம்?இரவில் இருந்து போடக் கூடாது..வாருங்கள்ரத்தத்தின் ரத்தங்களே!

இவ்வாறு, பார்த்திபன், சிலேடையாக ரத்த தானம் செய்ய வருவோருக்கு அட்வைஸ் செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+