சசிகலா அடைக்கப்பட்டுள்ள ஜெயிலுக்கு கூடுதல் "பவர்"!
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரு: மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மோச வழக்கில் கைதாகி பவர் ஸ்டார் சீனிவாசன் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கண்ணா லட்டு திங்க ஆசையா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல கோடி ரூபாய் மோசடி செய்தாக சென்னை, டெல்லி உள்ளிட்ட நீதிமன்றங்களில் அவர் மீது ஏகப்பட்ட புகார்கள் உள்ளன.
இந்நிலையில் டெல்லியில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு குறைந்த வட்டியில் வங்கியில் ரூ.500 கோடிக்கடன் வாங்கி தருவதாக கூறி 10 கோடி ரூபாயை அவர் கமிஷனாக பெற்றதாக கூறப்படுகிறது.

மோசடி செய்த பவர்ஸ்டார்
கமிஷனை பெற்றுக்கொண்ட பவர் ஸ்டார் வங்கியில் இருந்து அந்த நிறுவனத்துக்கு கடன் பெற்று கொடுக்காததோடு, கமிஷன் தொகையையும் திரும்ப கொடுக்கவில்லை என தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அந்த வழக்கில் ஜாமீன் பெற்று வெளிய வந்தார் பவர் ஸ்டார்.

திகார் சிறையில் அடைப்பு
ஆனால் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெறும் டெல்லி கோர்ட்டில் அவர் ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக, கடந்த மார்ச் மாதம் மீண்டும் பவர்ஸ்டார் சீனிவாசன் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

பெங்களூரிலும் மோசடி
இந்த நிலையில், பெங்களூரு தொழில்அதிபர் மன்சூர் ஆலம், அவருடைய தம்பி சாஜத் வாகப் ஆகியோருக்கு வங்கியில் ரூ.30 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.1 கோடியை ‘பவர்ஸ்டார்‘ சீனிவாசன் மோசடி செய்ததாக பெங்களூரு காவல்நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பரப்பன அக்ரஹார சிறையில்..
இதுகுறித்து விசாரணை நடத்த டெல்லி போலீசார் அவரை நேற்று பெங்களூருவுக்கு அழைத்து வந்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், 15 நாள் நீதிமன்ற காவலில் பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.

சசிகலாவும் அங்குதான்..
சிறையில் அடைக்கப்பட்ட பவர் ஸ்டார் சீனிவாசனிடம் பெங்களூரு போலீசார் விசாரணை நடத்தலாம் என கூறப்படுகிறது. பவர் ஸ்டார் தற்போது அடைக்கப்பட்டுள்ள பரப்பன அக்ரஹார சிறையில்தான் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி சசிகலாவும் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications