நாளிதழில் எழுதிய தொடருக்கு முட்டுக்கட்டை.. 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' என பிரகாஷ் ராஜ் கண்டனம்
கன்னடத்தில் தான் எழுதி வந்த தொடரை திடீரென நிறுத்தியது சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை: கன்னடத்தில் பிரகாஷ்ராஜ் எழுதி வந்த தொடர் திடீரென நிறுத்தப்பட்டது எழுத்துரிமை மீது நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் தனது நண்பர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கு நடைபெற்றது முதல் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். மேலும் தாஜ்மகால் உலக அதிசய பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கு அவரது தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
விவசாயிகள் பிரச்சினை, கந்து வட்டி பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக் காட்டி டுவிட்டரில் கருத்து தெரிவித்து வரும் அவர் சிலவற்றை கன்னட பத்திரிகைகளில் தொடராகவும் எழுதி வந்தார்.
|
சர்ஜிக்கல் ஸ்டிரைக்
இந்நிலையில் ஒரு பத்திரிகைக்கு தான் எழுதிய தொடர் திடீரென நிறுத்தப்பட்டதற்கு டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், எழுத்துரிமை மீது நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக். நான் எழுதி வந்த தொடர் திடீரென நிறுத்தப்பட்டதன் பின்புலத்தில் கண்ணுக்கு தெரியாத கைகள் உள்ளன.

கண்ணுக்கு புலப்படாத கைகளுக்கு சொந்தங்களே...
தொடர் நிறுத்தப்பட்டதற்கு பின்புலத்தில் உள்ள கைகளுக்கு சொந்தகாரர்களே, நீங்கள் அணிந்துள்ள முகவரிக்கு பின்னால் உள்ள உங்கள் முகத்தை மக்கள் புரிந்து கொண்டார்கள். கன்னட வாசகர்களுடன் நான் எழுதும் தொடரை முடக்குவதன் மூலம் அவர்களுடனான உறவை பிரிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா.

ஹேஷ்டேக் வைத்தே...
நடிகர் பிரகாஷ் ராஜ் தான் கேட்கும் அனைத்து கேள்விகளையும் #justasking என்ற ஹேஷ்டேக் கொண்டே கேட்கிறார். இதை அவர் தனது டிரேட்மார்க்காகவே பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரகாஷ் ராஜ் விளக்கம்
கர்நாடகாவை கன்னடர்கள் தான் ஆள வேண்டும் என கூறியதாக வெளியான தகவலுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். தகுதி வாய்ந்த ஒருவர் நாட்டின் எந்த மாநிலத்திற்கும் தலைவராகலாம் என்பதே ஒரு இந்தியனாக தனது நிலைப்பாடு என நடிகர் பிரகாஷ் ராஜ் டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications