ஆர்கே நகர் பணப்பட்டுவாடா... 5 கோடி வரி ஏய்ப்பு.. சரத்குமாரிடம் ஐடி அதிகாரிகள் 2 மணி நேர விசாரணை
ஆர் கே நகர் தொகுதி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா மற்றும் வரி ஏய்ப்பு குறித்து சரத்குமாரிடம் இன்று நடைபெற்ற 4வது நாள் விசாரணை முடிவடைந்தது.
சென்னை: நடிகர் சரத்குமாரிடம் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உத்தரவிட்டுள்ளதால் அவர் வருமான வரிதுறை அலுவலகத்தில் ஆஜரானார்.
ஆர்.கே.நகர் இடைதேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெறுவது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி உள்ளிட்டோரின் வீடுகளில் கடந்த 7-ஆம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது முக்கிய ஆவணங்களும், ரூ.89 கோடி பணமும் கைப்பற்றப்பட்டதால் அவர்களை நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

விசாரணை
அதன்படி கடந்த திங்கள்கிழமை சரத்குமார், விஜயபாஸ்கர், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் ஆஜரானார்கள். அவர்களிடம் 5 மணி நேரத்துக்கு அதிகமாக விசாரணை நடத்தப்பட்டது.

ராடன் அலுவலகம்
இந்நிலையில் நேற்று முன்தினம் சரத்குமாரின் மனைவி ராதிகாவின் ராடன் அலுவலகத்திலும் 8 மணி நேரம் தொடர்ந்து சோதனை நடைபெற்றது. அப்போது அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், வங்கிக் கணக்குகள் குறித்தும் கொட்டிவாக்கத்தில் உள்ள வீட்டில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மீண்டும் விசாரணை
மேலும் அவரை மீண்டும் ராடன் அலுவலகத்துக்கு அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில், அவர் மீண்டும் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

5 கோடி வரி ஏய்ப்பு
இதில் சுமார் 5 கோடி ரூபாய் வரை சரத்குமார் ராதிகா வரி ஏய்ப்பு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து இன்று மீண்டும் ஐடி அதிகாரிகள் முன் ஆஜராக வேண்டும் என்று சரத்குமாருக்கு உத்தரவிடப்பட்டது.

4வது முறையாக..
அதன் அடிப்படையில், இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்திற்கு நடிகர் சரத்குமார் ஆஜரானார். அவரிடம் வரி ஏய்ப்பு குறித்தும், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 2 மணி நேர விசாரணைக்கு பின்னர் சரத்குமார் வெளியே அனுப்பப்பட்டார்.

ராதிகா வரவில்லை
இன்று ராதிகாவும் ஆஜராக வேண்டும் என்று ஐடி அதிகாரிகள் உத்தரவிட்ட போதிலும், ராதிகா இன்று விசாரணைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்!












Click it and Unblock the Notifications