ஜோக்கர் பட விழாவில் 'ஆண்டிகள்' பேச்சுக்கு நடிகர் சிவகுமார் வருத்தம்!
சென்னை: ஜோக்கர் பட விழாவில் 'ஆண்டிகள்' என குறிப்பிட்டு பேசியதற்கு ஆண்டி பண்டாரம் சமூகத்தினரிடம் வருத்தம் தெரிவித்திருக்கிறார் நடிகர் சிவகுமார்.
ஜோக்கர் பட விழாவில் 'ஆண்டிகள்' போல வாழ்ந்தவர்கள் என இயக்குநர் ராஜூமுருகனையும் நாயகன் சோமசுந்தரத்தையும் சிவகுமார் குறிப்பிட்டிருந்தார். இதற்கு சமூக வலைதளங்களில் ஆண்டி பண்டாரம் சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அத்துடன் சிவகுமார் தம்முடைய பேச்சுக்காக வருத்தம் தெரிவிக்கக் கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்தனர். இந்நிலையில் நடிகர் சிவக்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இளம் வயதிலேயே குடும்பத்தை விட்டு ஊர் ஊராக அலைந்து, பந்த பாசம் துறந்து வாழ்ந்தவர்கள் டைரக்டர் ராஜுமுருகனும், ஹீரோ குரு சோமசுந்தரமும். அகோரிகள், பாலைவனத்தில் வசிப்பவர்கள் என பலரோடு தங்கி அனுபவம் பெற்றவர்கள் என்பதைச் சொல்லும்போது ஆண்டிகளாக வாழ்ந்த இரண்டு பேர் சேர்ந்து 'ஜோக்கர்' படம் எடுத்திருக்கிறார்கள் என்று பேசியிருந்தேன்.
இறைவன் படைப்பிலே அனைவரும் சமம் என்று நினைப்பவன் நான்.. நான் அறியாமல் பேசியது ஆண்டிப்பண்டாரம் என்று ஒரு பிரிவு மக்களை நோகச் செய்திருக்கிறது என்று தெரிவிப்பதால், அவர்கள் மனதைப் புண்பட வைத்ததற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.
இவ்வாறு சிவகுமார் கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications