மெரினாவில் இளைஞர்கள் மீது போலீஸ் தடியடி.. சிம்பு கண்டனம் தெரிவித்து தர்ணா!
சென்னையில் ஜல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியுள்ளனர். இதற்கு நடிகர் சிம்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் மீது தடியடி நடத்தியை கண்டித்து நடிகர் சிம்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஜல்லிக்கட்டை ஆதரித்தும் அலங்காநல்லூரில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் சென்னை மெரினா கடற்கரை அருகே நேற்று காலை முதல் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 'ஜல்லிக்கட்டுக்கு உள்ள தடையை உச்சநீதிமன்றம் உடனடியாக நீக்க வேண்டும் எனவும், பீட்டா அமைப்பை தடைவிதிக்க வேண்டியும் விடிய விடிய அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏராளமான இளைஞர்கள் குவிந்து வருவதால் மெரினா திக்குமுக்காடி வருகிறது. அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
இதனிடையே நேற்று இரவு 8 மணியளவில் சாலையில் நின்றிருந்தவர்களை அப்புறப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் மீது தடியடி நடத்தியதற்கு நடிகர் சிம்பு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தடியடியை கண்டித்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார். இதில் நடிகர்கள் விஜய் வசந்த், விஷ்ணு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications