பிரமிப்பும், ஆச்சர்யமும் கொண்டவர் ஜெயலலிதா: நடிகர் சூர்யா புகழாரம்
மறைந்த ஜெயலலிதாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் நடிகர் சூர்யா.
சென்னை: மறைந்த ஜெயலலிதா பிரமிப்பும் ஆச்சர்யமும் கொண்ட பெண்மணி என நடிகர் சூர்யா புகழாரம் சூட்டியுள்ளார்.
நேற்று இரவு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா காலமானார். கடந்த 75 நாட்களாக அவர் உடல் நலமில்லாமல் பட்ட வேதனை நேற்றோடு முடிவுக்கு வந்தது. என்றாலும், அவரது இழப்பு அதிமுகவிற்கும் பேரிழப்பாக மாறியுள்ளது. தமிழக மக்கள் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. காலையில் இருந்து ஏராளமான தேசிய, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வந்தனர். ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் பொதுமக்கள் என ராஜாஜி ஹாலில் குவித்திருந்தனர்.
இறுதி ஊர்வலத்திற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்த நிலையில், நிற்கவும் இடமில்லாத வகையில் நெருக்கி அடித்து விஐபிக்களும், திரைத்துறையினரும் ஜெயலலிதாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். ஜெயலலிதாவிற்கு திரைப்பட நடிகர் சூர்யா நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், ஜெயலலிதாவின் செயல்பாடுகள் பிரமிப்பானவை, ஆச்சர்யம் ஊட்டக் கூடியவை. அவருக்கு இருக்கும் பல்வேறு வேலைகளுக்கு நடுவில் எனது திருமணத்திற்கு வந்திருந்தார். எங்கள் வீட்டிற்கு வந்து எங்களை ஆசிர்வாதம் செய்திருக்கிறார். அவருடைய அன்பு எங்களை விட்டு எப்போது நீங்காது. அவருடை ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் என்று சூர்யா கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications