“தலைவா என்ன காப்பாத்து”.. மருத்துவமனையில் கண்கலங்கிய நபர்.. மீளாத்துயரில் கையெடுத்து கும்பிட்ட விஜய்
கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் குடித்ததில் 42 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது தலைவா, தலைவா என உறவினர்கள் விஜயை கட்டி பிடித்து அழுத சம்பவம் நெஞ்சை உலுக்கியுள்ளது.
கள்ளக்குறிச்சி அடுத்த கோமுகி ஆற்றங்கரை நந்தவனம் பகுதியில் கள்ளச்சாராயம் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. இதில் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம், மாதவச்சேரி பகுதியில் விற்பனை செய்த பாக்கெட் சாராயத்தை சிலர் குடித்திருக்கின்றனர். இப்படி குடித்தவர்களில் பலருக்கு வாந்தி, மயக்கம், நெஞ்செரிச்சல் உள்ளிட்டவை ஏற்பட்டிருக்கிறது. எனவே உறவினர்கள் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சேர்திருக்கின்றனர்.

ஆனால், இதில் சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு 5-8 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மாலை நிலவரப்படி சுமார் 42 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க மதுவிலக்கு பிரிவு செயல்பட்டு வருகிறது. இருப்பினும் பாக்கெட்டில் சாராய விற்பனை தமிழகத்தின் பல பகுதிகளில் படுஜோராக விற்பனை செய்யப்படு வருகிறது என தொடர் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
இப்படி இருக்கையில்தான் கள்ளக்குறிச்சியில் பாக்கெட் சாராயம் குடித்த 35 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து உடனடி ஆக்ஷனில் இறங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை ஷ்ரவண் குமார் ஜடாவத்தை பணியிடமாற்றம் செய்தும் காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனாவை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டுள்ளார். மேலும், கள்ளக்குறிச்சி மதுவிலக்குப் பிரிவையே கூண்டோடு சஸ்பெண்ட் செய்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. தற்போது வரை 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அதேபோல உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.
மறுபுறம் எதிர்க்கட்சி தலைவர்கள், மருத்துவமனையைில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர். நடிகரும், தமிழக வெற்றி கழக்தின் தலைவருமான விஜய் ஆறுதல் கூறுகையில், உறவினர் கட்டிபிடித்து தலைவா, தலைவா காப்பாதுங்க என்று கதறிய காட்சிகள் பார்ப்போரின் நெஞ்சை உலுக்கியுள்ளது.
தற்போது 109 பேர் கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர். தற்போது உயிரிழந்தவர்களில் 21 பேரின் சடலம் ஒரே இடத்தில் வைத்து தகணம் செய்யப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications