நடு ரோட்டில் நைட்டியுடன் செய்தியாளர்களுடன் சண்டை பிடித்த நடிகை வனிதா
நடிகர் விஜயகுமார் மகள் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: திரைப்பட நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா மீது மதுரவாயல் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திரும்பவும் சண்டை போட்டு ரகளையை கூட்ட ஆரம்பித்து விட்டார் வனிதா. சில வருடங்களுக்கு முன்பு நடிகர் விஜயகுமாரின் விவகாரம் தமிழகமே அறிந்தது. விஜயகுமார்-மஞ்சுளாவின் மகள்களில் ஒருவரான வனிதா, சகோதரர் நடிகர் அருண்குமார் தன்னை கடுமையாக தாக்கினார், பெற்றோர் என்னை அடித்து துன்புறுத்தினார்கள் என்றெல்லாம் புகார் அளித்தார். பெற்றோரையும், கூட பிறந்தவர்களையும் மிக கேவலமாக பேசி குடும்பத்தை சந்தி சிரிக்க வைத்துவிட்டார்.

பாதித்த நடிகை மஞ்சுளா
குடும்பத்தையும் பற்றி பேசினால் எல்லாமே நாறிப்போயிடும் என்றும் பத்திரிகையாளர்கள் முன்னாலேயே பேசினார். இந்த சம்பவம் மறைந்த நடிகை மஞ்சுளாவை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் ரொம்பவே பாதித்ததாக கூறப்பட்டது. இந்த விவகாரம் எப்படியோ முடிந்து அடங்கி கிடந்த நிலையில் தற்போது மீண்டும் எழுந்துள்ளது.

வாடகைக்கு எடுத்தார்
சென்னை ஆலப்பாக்கத்தில் அஷ்டலட்சுமி நகரில் விஜயகுமாருக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. இது திரைப்படங்கள் எடுப்பதற்கு வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வனிதா சினிமா படப்பிடிப்பு நடத்துவதற்காக இதை வாடகைக்கு எடுத்துள்ளார்.

வனிதாவின் அடாவடி பேச்சு
சமீபத்தில் அதற்கான படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது. இதனால் வீட்டை காலி செய்யுமாறு நடிகர் விஜயகுமார் கூறியுள்ளார். ஆனால் வனிதா வீட்டை காலி செய்யாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. காலி செய்தே ஆக வேண்டும் என்று நடிகர் விஜயகுமார் வனிதாவிடம் கண்டிப்புடன் கூறியுள்ளார். ஆனால் வனிதாவோ, "இது என்னுடைய சொத்து... காலி செய்ய முடியாது" என அடாவடியாக பேசியுள்ளார்.

வீட்டை மீட்டு கொடுங்கள்
இதையடுத்து நடிகர் விஜயகுமார், வனிதா மீது மதுரவாயல் போலீசில் புகார் செய்தார். அதில், ``என்னுடைய மனைவி மஞ்சுளாவுக்கு சொந்தமான வீடு, மதுரவாயல், அஷ்டலட்சுமி நகரில் உள்ளது. அந்த வீட்டை லீசுக்கு கொடுத்துள்ளேன். வீட்டுக்குள் நுழைந்த வனிதா, அங்கிருந்து வெளியில் செல்ல மறுக்கிறார். எனவே, அந்த வீட்டை அவரிடமிருந்து மீட்டுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்தியாளர்கள் விரைவு
இந்த புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் விசாரணை செய்ய வனிதாவை நேரில் அழைத்திருந்தனர். அதன்படி வனிதாவும் இன்று காலையில் மதுரவாயல் காவல் நிலையத்துக்கு வந்தார். இதனிடையே, தந்தை - மகள் தகராறு அறிந்த செய்தியாளர்கள் வனிதா வீட்டிற்கு சென்று செய்தி சேகரிக்க சென்றனர்.

நைட்டியுடன் தகராறு
அப்போது, வனிதா செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், ஒருகட்டத்தில் செய்தியாளர்களை தகாத வார்த்தைகளால் வனிதா பேச தொடங்கினார். நைட்டி உடையில் நடு ரோட்டில் நின்றபடி அவர் காட்டமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர்கள்-வனிதா இடையே தகராறு முற்றி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகராறு குறித்தும் மதுரவாயல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications