ஜனநாயகத்தின் இன்னொரு கேலிக்கூத்து... தீபன், சுமதி வீடியோ குறித்து விஷால் கருத்துப்பதிவு!
தனது வேட்புமனுவை முன்மொழிந்த தீபன், சுமதி தேர்தல் அதிகாரி முன்பு வாக்குமூலம் அளிக்கும் வீடியோ பதிவிற்கு நடிகர் விஷால் பதில் கருத்து பதிவிட்டுள்ளார்.
சென்னை : தீபன், சுமதி ஆர்கே நகர் தேர்தல் அதிகாரி முன்பு வாக்குமூலம் அளிக்கும் வீடியோவை பதிவை சுட்டிகாட்டி நடிகர் விஷால் ஜனநாயகத்தின் இன்னொரு கேலிக்கூத்து என்று கருத்து பதிவிட்டுள்ளார். வீடியோவில் தீபன் நான் போட்ட கையெழுத்து என்னுடையதல்ல என்று சொல்வதாக விஷால் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திடீரென களமிறங்கிய நடிகர் விஷாலின் ஹீரோயிசம் வேட்பு மனு தாக்கலில் இருந்தே தொடங்கியது. மனு தாக்கலுக்கு வரிசையில் தான் வரவேண்டும் என்று சுயேச்சைகள் போர்க்கொடி பிடித்தன. இதனையடுத்து மனுக்கள் பரிசீலனையின் போது விஷாலின் மனு நிராகரிக்கப்பட்டது.

விஷாலின் மனுவை முன்மொழிந்தவர்களில் இரண்டு பேர் பின்வாங்கியதால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. ஆனால் வேட்பு மனுவை முன்மொழிந்த சுமதி, தீபன் மிரட்டப்பட்டதாக விஷால் தொடர்ந்து கூறி வந்தார். இதற்கான ஆடியோ ஆதாரத்தையும் விஷால் வெளியிட்டார். தொடர்ந்து தேர்தல் அதிகாரியிடமும் இது குறித்து புகார் அளித்தார்.
இதனையடுத்து தேர்தல் அதிகாரி முன்னர் இரண்டு பேரையும் ஆஜர்படுத்த வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் தலைமறைவாகிவிட்டதாக விஷால் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் தெரிவித்தார். எனினும் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்ப்டடது.
Here is another instance of mockery of Democracy !!!
— Vishal (@VishalKOfficial) December 8, 2017
The person accepting that the signature made by him is not his.
He said & I quote, "Naan Potta Kaiyeludhu Enododhu Illai"
In Tamil " நான் போட்ட கையெழுத்து என்னுடையது இல்லை " pic.twitter.com/akr19GJ7Ls
இதனிடையே தீபன், சுமதி இருவரும் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி முன்னர் இன்று வாக்குமூலம் அளித்துள்ளனர். இதற்கான வீடியோ ஆதாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பதிவை சுட்டிக்காட்டி நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில் இன்னொரு ஜனநாயக கேலிக்கூத்திற்கான சான்று இது. தேர்தல் அதிகாரி முன்னர் வாக்குமூலம் அளிக்கும் தீபன் நான் போடும் கையெழுத்து என்னுடையதல்ல என்று சொல்வதாக விஷால் அதில் குறிப்பிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications