அண்ணா ஒரு நிமிஷம்! திருச்செந்தூரில் அழைத்த பெண் துப்புரவு பணியாளர்கள்! உடனே யோகிபாபு செய்த செயல்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார் காமெடி நடிகர் யோகிபாபு. அவருக்கு கோயிலில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தனது மனைவி, குழந்தையுடன் வந்திருந்த அவருக்கு கோயில் அர்ச்சகர்கள் சகல மரியாதையையும் கொடுத்து உள்ளே அழைத்து சென்றனர்.
கோலிவுட்டில் அசைக்க முடியாத காமெடி நடிகராக வலம் வருகிறார் யோகிபாபு. யாமிருக்க பயமேன் என்ற படத்தின் மூலம் ரசிகர்களால் அறியப்பட்டார். அவரை பலரும் உருவக் கேலி செய்துள்ளனர். இதற்கு கண்டனங்களும் ஏராளம். இந்த படத்திற்கு பிறகு யோகிபாபுவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வருகின்றன.

கவுண்டமணி, செந்தில் போட்டியில் இல்லாத நிலை, விவேக் இறந்துவிட்டார், வடிவேலுவோ நடிப்பிலிருந்த ஒதுங்கிவிட்டார் என சொல்லும் அளவுக்கு உள்ளார், காமெடியில் கலக்கிய சந்தானமோ ஹீரோவாக நடித்து வருகிறார். இதனால் காமெடி நடிகர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டது.
அந்த வாய்ப்பை யோகிபாபு சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்றே சொல்லலாம். இவரும் ஹீரோவாக மண்டேலா என்ற படத்தில் நடித்துள்ளார். அது போல் கோலமாவு கோகிலா படத்தில் யோகி பாபு லீடு ரோல் செய்திருந்தார். இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றன. இதையடுத்து ஜெயிலர் படத்திலும் நடித்திருந்தார்.
அதில் பாரதியார் சொன்ன கவிதைகளை இவர் மாற்றி சொன்ன விதம் சிரிப்பை வரவழைத்தது. இவருக்கு நேற்று 39ஆவது பிறந்தநாள் ஆகும். இதையொட்டி தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்றிருந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்த பக்தர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
அது போல் அர்ச்சகர்களுடனும் செல்பி எடுத்தார். இப்படி யார் செல்பி கேட்டாலும் இல்லை என மறுக்காமல் அவர்களின் தோளின் மேல் கையை போட்டபடி போஸ் கொடுத்து எடுத்தார். அந்த வகையில் அவர் முருகனை கண் குளிர தரிசனம் செய்துவிட்டு பிறகு வெளியே வந்தார்.
அப்போது அவரை அண்ணா அண்ணா ஒரு நிமிஷம் என அழைத்தனர். உடனே யோகிபாபு திரும்பி பார்த்த போது அங்கு தூய்மை பணியாளர்கள் நின்றிருந்தனர். அவர்களிடம் என்னம்மா என கேட்டார். அதற்கு அவர்கள் உங்களுடன் போட்டோ எடுக்க வேண்டும் என கேட்டனர். உடனே அவர்களுடன் நின்று யோகிபாபு போட்டோ எடுத்துக் கொண்டார்.
அது போல் கோயில் பணியாளர்கள், கோயில் காவலாளிகள் உள்ளிட்டோருடனும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். யாரெல்லாம் கை கொடுத்தார்களோ அவர்களுக்கெல்லாம் கை கொடுத்தார். திருச்செந்தூர் கோயிலுக்கு யோகி பாபு அவ்வப்போது வருகிறார்.
அவர் சுவாமி பக்தி உள்ளவர். திருச்செந்தூர் என்றில்லை நிறைய கோயில்களுக்கு அவர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்று வருகிறார். அங்கும் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொள்கிறார். யோகி பாபு வடதமிழகத்தைச் சேர்ந்தவர், கஷ்டப்பட்டு இந்த நிலையை அடைந்தவர். இவரை வைத்து தோனியும் ஒரு படத்தை தயாரித்துள்ளார். ரஜினியுடன் நடித்த போது கூட எந்த பந்தாவும் இல்லாமல் அனைவருடனும் எளிதாக பழகுகிறார்.
அவரது உருவத்தை கேலி செய்த பலர் இன்று அவருடன் செல்பி எடுக்கும் அளவுக்கு யோகி பாபு பிரபலமடைந்துவிட்டார். இவருக்கு மனைவியும் 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications