ஊரே விவாதிக்கும் விஷயத்தில் நீங்கள் மட்டும் கருத்து சொல்ல மறுப்பது ஏன்?- ரஜினிக்கு கஸ்தூரி கேள்வி
Recommended Video

சென்னை: ஊரே விவாதிக்கும் விஷயத்தில் ரஜினி மட்டும் கருத்து சொல்ல மறுப்பது ஏன் என்று ரஜினிக்கு கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை- தூத்துக்குடி சென்ற விமானத்தில் தமிழிசை பயணம் செய்த போது சோபியா என்ற மாணவி பாசிச பாஜக அரசு ஒழிக என்று கோஷமிட்டார். இதையடுத்து தமிழிசையின் புகாரின்பேரில் சோபியா கைது செய்யப்பட்டார்.

இதற்கு அரசியல் கட்சி தலைவர்களும் மாணவர் அமைப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். அதேபோல் தமிழகத்தில் டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி வி ரமணா ஆகியோர் வீடுகளில் சிபிஐ ரெய்டு நடத்தியது.
இதையடுத்து தமிழக அரசுக்கு எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறிவிட்டார்.
ஊரே விவாதிக்கும் விஷயத்தில் ரஜினி மட்டும் கருத்து சொல்ல ஏன் இவ்வளவு தயங்க வேண்டும்?
— Kasturi Shankar (@KasthuriShankar) September 6, 2018
தவறு நடக்கையில் பேசாமலிருப்பதும் தவறுதான். #MemeKast #Rajini pic.twitter.com/YZooptu8Wh
விரைவில் கட்சியை தொடங்கும் ரஜினிகாந்த் இப்படி பட்டும் படாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் ஊரே விவாதிக்கும் விஷயத்தில் ரஜினி மட்டும் கருத்து சொல்ல ஏன் இவ்வளவு தயங்க வேண்டும்? தவறு நடக்கையில் பேசாமலிருப்பதும் தவறுதான் என்று அறிவுறுத்தியுள்ளார்.
-
“ரஜினியின் ஆளுமையை கொச்சைப்படுத்த கூடாது..” ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு திருமாவளவன் பதிலடி! -
உடல்நிலை சரியில்லை என்று அரசியலுக்கு வராமல் தப்பினார்! ரஜினி பற்றி ப்ளூ சட்டை மாறன் பதிலடி! அடுத்த பஞ்சாயத்து -
செத்துவிழும் மீனெல்லாம் ஆற்றோடு போகும் .. ரஜினிக்காக வைரமுத்து எழுதிய பொக்கிஷம்! வெளிவந்த ரகசியம் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே












Click it and Unblock the Notifications