குரல்கொடுத்தால் காத்திருக்கும் கண்மணிகள் கோடியுண்டு ஓடிவருவர்- கமலுக்கு கஸ்தூரியின் "எசப்பாட்டு"
Recommended Video

சென்னை: மதவாதம், ஜாதியம் பேசுவோருக்குப் பின்னால் 4 பேர் செல்லும்போது நாட்டுக்கு நல்லது செய்வேன் என கிளம்புவோர் பின்னால் செல்வதில் என்ன தவறு உள்ளது என்று நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
சுதந்திரத் தினத்தையொட்டி தனது அடுத்தடுத்த டுவீட்டுகள் மூலம் நடிகர் கமல் தமிழக அரசை நேரடியாக விமர்சித்தார். அதன் மூலம் அவர் அரசியலுக்கு வரும் எண்ணத்தில் உள்ளது வெளிப்பட்டது.
மேலும் ஊழல் இருக்கும் வரை சுதந்திரம் பெற்றாலும் நாம் அடிமைகளே. புதிய சுதந்திர போராட்டத்துக்கு துணிச்சல் உள்ளவர்கள் வாரும் என்றும் கமல் அழைப்பு விடுத்துள்ளார்.

பெரிய திட்டங்கள்
இதுகுறித்து நடிகை கஸ்தூரி கூறுகையில், தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என்று கமல் கூறுவதை பார்த்தால் ஏதோ பெரிய திட்டங்கள் இருக்கும் என்று தெரிகிறது. அவ்வாறு பெரிய திட்டங்கள் இருந்தால் அதை அவர் தெளிவாக கூற வேண்டும் என்று நான் நேரடியாக அவருக்கு கோரிக்கை வைக்கிறேன்.

போலி சாமியார்
மதவாதம், ஜாதியம் பேசுவோர், மரம் வெட்டுவோருக்கு பின்னால் 4 பேர் செல்கின்றனர். நம் நாட்டில் போலி சாமியாருக்குக் கூட வரவேற்பு உள்ளது. அவ்வாறு இருக்கும்போது நல்லது செய்வதாக கிளம்பும் 4 பேர் பின்னால் 4 பேர் செல்வதில் என்ன தவறு உள்ளது என்றார்.
|
ட்விட்டரில்..
அத்துடன் ட்விட்டரிலும் நடிகை கஸ்தூரி கமல் கருத்துக்கு எசப்பாட்டுகளை அடுக்கியுள்ளார். ட்விட்டரில் கஸ்தூரியின் கருத்து:
குரல்கொடுத்தால் கைகொடுக்க
காத்திருக்கும் கண்மணிகள்
கோடியுண்டு . ஓடிவருவர்
கட்டளைக்கு கரைப்புரண்டே என்று கஸ்தூரி பதவிட்டுள்ளார்.
|
கமல் மனதில் என்ன உள்ளது?
அதிமுக எம்எல்ஏ-க்கள் கூவத்தூரில் பணம் பெற்றதாக வெளியான ஸ்டிங் ஆபரேஷனை தொடர்ந்தும், குட்கா ஊழலை தொடர்ந்தும் தமிழக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தினமும் கேட்டுக் கொண்டுள்ளன. இந்நிலையில் கமல் தனது டுவீட்டில் ஏன் அப்படி கூறினார்?
இவ்வாறு கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications