அந்தப் பக்கம் லதா.. இந்தப் பக்கம் நிர்மலா.. ஓ.பி.எஸ். அணியின் கோலாகல ஓட்டு வேட்டை!
சென்னை: ஆர்.கே. இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக நடிகை லதா பிரசாரம் செய்தார்.
ஆர்.கே.நகருக்கு வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் எப்படியாயினும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் ஓபிஎஸ் அணியினரும், தினகரன் அணியினரும் தங்கள் சின்னத்தை பிரபரலப்படுத்த கடுமையாக போராடி வருகின்றனர்.

தேர்தல் அறிக்கை
இந்நிலையில் ஓபிஎஸ் அணியினரின் தேர்தல் அறிக்கையும் மிகவும் வித்தியாசமானதாக இருந்தது. இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு நடமாடும் எம்எல்ஏ அலுவலகம் அமைக்கப்படும் என்று ஓபிஎஸ் அணியினர் வாக்குறுதி அளித்துள்ளனர்.

குறைதீர்க்க மொபைல் ஆப்
மக்களின் குறைகளை அவ்வப்போது கேட்டறிய மொபைல் செயலி ஒன்றும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் எழில் நகரில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் உள்ளிட்ட 108 அம்சங்கள் கொண்ட தேர்தல் அறிக்கைகள் தயார் செய்யப்பட்டன. இது மற்றவர்களைக் காட்டிலும் வித்தியாசமானது என்றும் தெரிவிக்கப்பட்டது.

நடிகை லதா பிரசாரம்
இந்நிலையில் நேற்று மாலை ஆர்.கே.நகரில் பழம்பெரும் நடிகை லதா, மதுசூதனனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். மேலும் நட்சத்திர பேச்சாளர்கள், நடிகர்கள் சுந்தர் ராஜன், தியாகு, ரஞ்சித், நடிகை பாத்திமாபாபு, நிர்மலா பெரியசாமி ஆகியோரும் மதுசூதனனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர்.

மக்கள்வரவேற்பு
செல்லுமிடங்களிலெல்லாம் ஓபிஎஸ் அணியினரின் தேர்தல் அறிக்கையை விவரித்து இவர்கள் பிரசாரம் செய்தனர். அப்போது ஓரிடத்தில் ஜல்லிக்கட்டு நாயகர் ஓபிஎஸ் என தெரிவித்தபோது அப்பகுதி மக்கள் கரகோஷங்களுடன் வரவேற்றனர்.

இரட்டை மின் விளக்கு
ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடைபெற முக்கிய காரணமாக இருந்த ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு பெற்ற வேட்பாளர் மதுசூதனனுக்கு "இரட்டை மின் விளக்கு" சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டனர். ஆர்.கே.நகரில் 100-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு இளைஞர்கள் ஆதரவு பிரசாரத்தில் ஈடுபட்டனர். 7 எம்எல்ஏக்களும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications