பீதி கிளப்பும் டெங்கு.. நெல்லை ஜிஎச்சில் கூடுதல் வார்டுகள் திறப்பு
டெங்கு காய்ச்சல் தொடர்ந்து பரவி வருவதால், நெல்லை அரசு மருத்துவமனையில் கூடுதல் வார்டுகள் திறக்கப்பட்டுள்ளன.
நெல்லை: நெல்லை அரசு மருத்துவமனையில் டெங்கு எண்ணிக்கை உயர்ந்து வருவதால் கூடுதல் வார்டுகள் திறக்கப்பட்டுள்ளன.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

குறிப்பாக மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிபட்டி பகுதியில் அடுத்தடுத்து இரு நாட்களில் 20க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் ஐகிரவுண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து தினமும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் டெங்கு காய்ச்சல் சதம் அடித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது.
இதையடுத்து நெல்லை அரசு மருத்துவமனையில் கூடுதல் வார்டுகள் திறக்கப்பட்டுள்ளன. அவசர சிகிச்சை பிரிவு பகுதியில் ஒரு படுக்கையறை பிரிவு முழுவதும் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால் நெல்லை மருத்துவ கல்லூரி டீன் டாக்டர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். உயிரிழப்பை தடுக்க தேவையான கூடுதல் மருந்துகளை தயாரா் நிலையில் வைத்திருக்க டாக்டர்களை அவர் உஷார் படுத்தியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications