மே 29ல் அதிமுக அம்மா அணி மா.செ கூட்டம்... அடுத்த ஆப்ரேஷனா?
வருகிற திங்கட்கிழமை அதிமுக அம்மா அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : அதிமுக அம்மா அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மே 29ம் தேதி காலை 11 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சி இரண்டாவது முறையாக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு, எடப்பாடி முதல்வராக பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவு என பல நெருக்கடிக்கு மத்தியிலும் கட்சியையும் ஆட்சியையும் நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுகவின் இரட்டை இலை சின்ன விவாகரத்தில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வர கடந்த மாதம் 26ம் தேதி கூட்டப்பட்ட மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதன்படி சசிகலா, தினகரனுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிக்னேச்சர் முடிந்து ஈபிஎஸ் தரப்பின் 12 ஆயிரத்து 500 பக்க ஆவணங்கள் கடந்த வாரம் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் அடுத்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக அம்மா அணி மாவட்ட செயலாளர்கள் மே 29ம் தேதி சென்னை ராயப்பேட்டையிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மே 29ம் தேதி காலை 11 மணியளவில் கூடும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் பழனிச்சாமி கட்சி கைநழுவிப் போகாமல் இருப்பதற்கான அடுத்த ஆபரேஷனில் இறங்குவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications