இலை கிடைத்தும் குக்கர் முந்தியதே... தோல்வியை ஜீரணிக்க முடியாமல் அதிமுகவினர் கலாட்டா?
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் கிடைத்தும் தோல்வி பெற்றுவிடுவோமோ என்ற அச்சத்தின் காரணமாக அதிமுகவினர் ரகளையில் ஈடுபட்டுள்ளதாகவே கூறப்படுகிறது.
Recommended Video

சென்னை: ஆர்கே நகர் வாக்கு எண்ணிக்கையில் தினகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் அதை ஜீரணிக்க முடியாத அதிமுகவினர் கலாட்டாவில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆர்கே நகர் இடைதேர்தல் வாக்கு எண்ணிக்கை ராணி மேரி கல்லூரியில் தொடங்கியது. ஆரம்பிக்கும் முன்பே அதிமுகவினர் அடையாள அட்டை இன்றி மையத்துக்கு சென்றுவிட்டதாக திமுகவினர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
சற்று நிலை சீரடைந்த பின்னர் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் திமுக ஒரு வாக்கை பெற்று அக்கவுன்ட்டை ஓபன் செய்தது.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு பதிவு இயந்திரங்களின் மூலம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கியது. அதில் இரண்டாவது சுற்றில் தினகரன் 7276 வாக்குகளும், அதிமுக 2738 வாக்குகளும், திமுக 1182 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

மோதல்
இதன் மூலம் தினகரன் முன்னிலையில் உள்ளார். இதனிடையே அதிமுக முகவர்களுக்கும் தினகரன் அணி முகவர்களுக்கும் இடையே கடும் மோதல் எழுந்தது. இதனால் மேஜைகள், நாற்காலிகள், மைக்குகள் தூக்கி வீசப்பட்டன. இதையடுத்து வாக்கு எண்ணிக்கையை அதிகாரிகள் நிறுத்திவிட்டனர். ராணி மேரி கல்லூரியில் பெரும் ரகளை நடைபெறுவதால் துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

தோல்வியை சந்திக்க முடியாமல்...
மற்ற கட்சிகள் யாரும் கலாட்டாவில் ஈடுபடாத நிலையில் அதிமுக மட்டும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இது அதன் தோல்வியை அதுவும் சுயேச்சை வேட்பாளரிடம் பெறும் தோல்வியை ஜீரணிக்க முடியாததே காரணமாக கூறப்படுகிறது.

அதிமுக ரகளை
கடுமையாக போராடி இரட்டை இலையை பெற்றம் ஒரு சுயேச்சை சின்னத்திடம் ஆளும் கட்சி தோற்றுவிடும் அவப்பெயர் ஏற்பட்டுவிடுமே என்ற கவலையில் அதிமுகவினர் இதுபோல் ரகளையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications