நெல்லையில் பயங்கரம்.. நள்ளிரவில் வெட்டிக் கொல்லப்பட்ட அதிமுக தொண்டர்
நெல்லை: நெல்லையில் அதிமுக தொண்டர் ஒருவர் நள்ளிரவில் வெட்டிக் கொல்லப்பட்டார்.
நெல்லை வேய்ந்தான்குளம் புதிய பஸ் நிலையம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இதன் அருகில் புட்புதரில் காலை ஆண் ஒருவர் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை கண்ட பார் ஊழியர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக உதவி கமிஷனர் கந்தசாமி, பெருமாள்புரம் இன்ஸ்பெக்டர் தில்லைநாயகம், மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் ராஜூ மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். கொலையான நபருக்கு வயது சுமார் 45 இருக்கலாம், கருப்பு கலரில் பேண்ட், கட்டம் போட்ட சட்டை அணிந்திருந்தார். கையில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் பச்சை குத்தப்பட்டுள்ளது.
அவரது உடல் அருகே மதுபாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் புதிய செருப்பு ஓன்று கிடந்தது. போலீசாரின் தீவிர விசாரணையில் அவர் பாளை திருமால் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த லூர்துசாமி என்பது தெரிய வந்தது. இவர் பாளை புதிய பஸ் நிலையத்தில் மிட்டாய், வெள்ளரிக்காய்,கர்சீப், பேனா போன்ற பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார்.
இரவு டாஸ்மாக் பார் அருகே நண்பர்களுடன் அவர் மது அரு்ந்தியுள்ளார். அப்போது அவர்களுள் ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் புளூட்டோ வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து நேராக டாஸ்மாக் பார்க்குள் சென்றது. பின்னர் புதிய பஸ் நிலைய வாசல் வரை சென்று விட்டு திரும்பியது.
இதனால் கொலையாளி பஸ் ஏறி தப்பி சென்றிருக்கலாம் என்று சந்தேகம எழுந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications