நீங்க துரோகி.. நீங்க கொலைகாரங்க.. ஆர்கே நகரில் போட்டி போட்டு உண்மை பேசும் அதிமுக கோஷ்டிகள்!
ஆர்கே நகர் இடைத் தேர்தலில் பிரசாரம் களைகட்டியுள்ள அதே நேரத்தில் அதிமுகவின் இரு கோஷ்டியும் அடிதடியிலும் இறங்கியுள்ளதை அதிர்ச்சியுடன் பார்க்கின்றனர் வாக்காளர்கள்.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா படுஜோராக நடப்பதை போலவே அதிமுக கோஷ்டிகளிடையேயான அடிதடியும் அமர்க்களமாக அரங்கேறுகிறது.
ஆர்.கே.நகர் தொகுதியில் மண்ணின் மைந்தன் என்ற கோஷத்துடன் வலம் வருகிறார் மதுசூதனன். அவருக்கு ஆதரவாக ஓபிஎஸ் அணி ஒட்டுமொத்தமாக களமிறங்கியுள்ளது.

ஜெயிப்போம்ல...
இதேபோல எப்படியும் ஜெயித்தேவிடுவோம் என மமதையுடன் வலம் வருகிறது தினகரன் கோஷ்டி. கையில் இருக்கும் பணத்தை தண்ணீராக செலவழிக்கிறது தினகரன் கோஷ்டி.

ஆட்டமும் அடிதடியும்
இதனிடையே தேர்தல் பிரசார களத்தில் ஆட்டம் பாட்டம் அமர்க்களம் என ஒருபக்கம் களைகட்டுகிறது... மறுபக்கம் அடிதடி.. மோதல்... ரத்தகாயங்கள் என களேபரங்களும் அரங்கேறுகிறது.

நேருக்கு நேர் மோதல்
ஆர்கே நகர் தொகுதியின் தெருக்கள் குறுகலானவை.. இந்த சந்தில் ஓபிஎஸ் கோஷ்டி எனில் பக்கத்து தெருவில் தினகரன் கோஷ்டி... இந்த இருதரப்பும் ஒரு இடத்தில் சந்திக்க நேர்ந்தால் மோதல் அடிதடிதான்..

துரோகி... கொலைகாரன்
அதுவும் ஓபிஎஸ் அணியை பார்த்து நீங்கள் எல்லாம் துரோகிகள் என தினகரன் கோஷ்டி ஒரு பக்கம் எகிறும்.. இன்னொரு பக்கம் ஓபிஎஸ் அணியோ, எங்கம்மாவையே கொன்ன பாவிங்கடா நீங்க.. கொலைகாரனுங்க என குரல் விடும்.. அப்புறம் என்ன அடிதடி அமர்க்களம்.. இதுதான் ஆர்கே நகரின் வீதியெங்கும் நாள்தோறும் அரங்கேறுகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications