நொறுக்கு தீனி.. சாப்பாட்டு இடைவேளை.. தகிட தகிட குத்தாட்டம்.. அதிமுக நடத்தும் அடடே உண்ணா விரதம்!
அதிமுக நடத்தும் உண்ணா விரத போராட்டத்தில் கட்சியினர் இடையிடையே சாப்பாடு, நொறுக்குத் தீனி சாப்பிடுவதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.
Recommended Video

சென்னை : அதிமுக நடத்தும் உண்ணா விரத போராட்டத்தில் கட்சியினர் இடையிடையே சாப்பாடு, நொறுக்குத் தீனி சாப்பிடுவதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து அதிமுக அரசு உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறது. மாவட்ட தலைநகரங்களில் கட்சி நிர்வாகிகள் காலையில் இருந்து உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
சென்னையில் அதிமுக போராட்டத்தை முதல்வர், துணை முதல்வர் தொடங்கி வைத்தார்கள். தற்போது இந்த போராட்டம்தான் பெரிய அளவில் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது.

கொண்டாட்டம்
இந்த உணர்ச்சிகரமான போராட்டத்தை அதிமுக கொண்டாட்டம் போல கொண்டாடி வருகிறது. பல மாவட்டங்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் களைகட்டி வருகிறது. முக்கியமாக பழைய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பாடல்கள் இதில் ஒலிபரப்பப்பட்டு, அதற்கு தொண்டர்கள் நடனமாடி வருகிறார்கள்.

ஸ்னாக்ஸ்
அதே சமயம் அதிமுகவினர் இடையிடையே நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டு வருகிறார்கள். கடலைமிட்டாய், சிப்ஸ், சாக்லேட், சமோசா, வடை என நிறைய தின்பண்டங்கள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் சாப்பிடுவதை சமூக வலைதளத்தில் பலர் கலாய்த்து வருகிறார்கள்.

உணவு இடைவேளை
அதே சமயத்தில் புதுக்கோட்டையில் வேறு மாதிரி உண்ணாவிரத(!) போராட்டம் செய்து இருக்கிறார்கள். அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தின் இடையில் மதிய உணவு இடைவெளி கேட்டு வெளியே சென்று இருக்கிறார்கள். இந்த சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காலையில் உணவு
அதே சமயத்தில் இந்த உண்ணா விரத போராட்டம் காலையிலேயே பெரிய பிரச்னையை உருவாக்கியது. அதிமுக கட்சியினர் 10 மணிக்கு மேல்தான் பல இடங்களில் போராட்டம் தொடங்கினர். இதனால் காலை உணவை சாப்பிட்டுவிட்டு உண்ணா விரத போராட்டத்திற்கு கட்சியினர் வந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
-
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
கொட்டும் மழைக்கு நடுவே.. பெங்களூரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்.. குவிந்த தமிழ் இளைஞர்கள்! -
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?











Click it and Unblock the Notifications