ஜெ.வுக்கு துரோகம் செய்த சசிகலாவை தண்டிக்க வேண்டும்: அதிமுக தொண்டர்கள் கொந்தளிப்பு
ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த சசிகலாவுக்கு தண்டனை அளிக்க வேண்டும் என அதிமுக தொண்டர்கள் கூறியுள்ளனர்.
சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் முன் அதிமுக தொண்டர்கள் குவிந்து வருவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு அதிமுகவில் மட்டுமல்ல பொதுமக்களும் ஆதரவு தந்துள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வீட்டுக்கு வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வீட்டுக்கு தொண்டர்கள் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்க செல்வதற்கு தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது. சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு அமருவதற்கு இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கூட்டம் அதிகமாக திரளுவதால் ஆதரவு தெரிவிக்க வருபவர்கள் மற்றும் பன்னீர்செல்வத்தின் பேட்டி ஆகியவற்றை பார்ப்பதற்கு வசதியாக 3 இடங்களில் எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒலி பெருக்கி வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த சசிகலாவுக்கு தண்டனை அளிக்க வேண்டும் என தொண்டர்கள் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.
-
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications