ஜெயலலிதா போலவே அசராமல் பதிலளித்து அசத்திய தீபா.. பெரும் நம்பிக்கையில் அதிமுக தொண்டர்கள்
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தந்தி டிவிக்கு அளித்த பேட்டி அதிமுகவினரை மிகப்பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜெயலலிதாவை போல எந்த கேள்விக்கும் அசராமல் பதிலளித்து பேட்டியளித்த தந்தி டிவியின் பாண்டேவை அசரடித்தது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அதிமுகவை கைப்பற்ற சசிகலா முயற்சிக்கிறார். இது அதிமுக தொண்டர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அதே நேரத்தில் மாற்று தலைமை, 2-வது கட்ட தலைவர்கள் யாரும் இல்லாத காரணத்தால் என்னதான் செய்வது என தெரியாமல் அதிமுக தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை தலைமை ஏற்க வேண்டும் என்ற குரலும் வலுத்து வருகிறது.
இந்த நிலையில் தீபாவின் பேட்டியை தந்தி டிவி இன்று ஒளிபரப்பியது. வழக்கமாக தந்தி டிவியின் ஒருங்கிணைப்பாளர் பாண்டே பேட்டியெடுக்கும் தலைவர்களை மடக்கியே பிரபலமானவர்.
ஆனால் தீபாவுடனான பேட்டியில் பாண்டேவின் அத்தனை கேள்விகளுக்கு உடனடியா எந்த தாதமும் இல்லாமல் பதிலடி கொடுத்தார் தீபா. தீபாவும் ஒரு பத்திரிகையாளர் என்பதால் பாண்டேவுக்கு உடனுக்கு உடன் பதிலடி தந்தார்.
தீபாவின் இந்த ஸ்டைல் அவரது அத்தை ஜெயலலிதாவை அப்படியே பிரதிபலிக்கிறது என உற்சாகத்துடன் இருக்கிறார்கள் அதிமுக தொண்டர்கள். பாண்டேவால் கடைசிவரை தீபாவை மடக்கவே முடியாமல் போனதும் அதிமுகவினரின் உற்சாகத்துக்கு மற்றொரு காரணம்,
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications