வேட்பு மனுத்தாக்கலில் "சாதனை" படைக்கும் அதிமுக... தாக்கலான 6 மனுக்களில் பாதி அதிமுகவுடையது!
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் எஸ். வளர்மதி இதுவரை 3 வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். மொத்தம் பெறப்பட்டுள்ள 6 வேட்பு மனுக்களில் பாதி இவரது வேட்பு மனுக்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீரங்கம் தொகுதிக்கு பிப்ரவரி 13ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. முதல் நாளில் அதிமுக வேட்பாளர் எஸ். வளர்மதியும், மாற்று வேட்பாளர் கோவிந்தனும் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

முதல் நாளில் இவர்கள் போக தேர்தல் மன்னன் என்று செல்லப் பெயர் பெற்ற பத்மராஜன், திரினாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மனோகரன் ஆகியோர் சுயேச்சையாக மனுத் தாக்கல் செய்தனர்
நேற்றைய 2வது நாள் இறுதியில், 2 சுயச்சைகள் மட்டும் மனுத் தாக்கல் செய்தனர். கூடவே வளர்மதியும், கோவிந்தனும் மீண்டும் மனுத் தாக்கல் செய்தனர்.
2 நாட்களில் மொத்தம் 6 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 3 மனுக்கள் வளர்மதியின் மனுக்களாகும். முதல் நாளில் அவர் 2 செட் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தார். நேற்று ஒரு செட் தாக்கலாகியது.
நாளை திமுக வேட்பாளர் என். ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். மற்ற கட்சிகள் நிலைப்பாடு தெரியவில்லை. பாஜக 2 நாட்களில் தாக்கல் செய்யும் என்று தெரிகிறது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications