துரோகத்தின் உண்மை முகம் அதிமுகதான்.. காவிரி பிரச்சனை பற்றி ஸ்டாலின் அறிக்கை
துரோகத்தின் உண்மை முகம் அதிமுகதான் என்று காவிரி பிரச்சனை பற்றி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
Recommended Video

சென்னை: துரோகத்தின் உண்மை முகம் அதிமுகதான் என்று காவிரி பிரச்சனை பற்றி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
காவிரி வாரிய பிரச்சனைக்காக இன்று அதிமுக கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் செய்தனர். இந்த நிலையில் மாலையில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டார்கள். இதுகுறித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது அறிக்கையில் ''மத்திய அரசின் துரோகத்தைக் கண்டித்து உண்ணாவிரதம் இருக்கும் அதிமுகவினர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் துரோகம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசைக் கண்டித்துப் பேசத் துணிவில்லாமல், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளைக் குறிவைத்து விமர்சித்து திசைதிருப்பும் கீழ்த்தரமான அரசியல் செய்திருக்கிறார்கள்.'' என்றுள்ளார்.
மேலும் ''ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ள அதிமுக, நாடாளுமன்றத்தில் தங்களுக்கு இருக்கிற பெரும்பான்மையைத் தமிழ்நாட்டின் நலனுக்குப் பயன்படுத்தாமல் பாஜகவின் துரோகத்துக்குத் துணை நின்றுவருகிறது. மக்களவையை முடக்கி,நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெறாமல் பார்த்துக்கொள்ளும் பாஜகவின் தந்திரமான ஏவலாட்களாக செயல்பட்டு மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கிறது அதிமுக.'' என்றுள்ளார்.
மேலும் ''தங்கள் துரோகத்தையும் இயலாமையையும் மறைப்பதற்காக உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். பாஜகவின் துரோகத்தைக் கண்டித்து மென்மையாகக் கூட எதையும் பேசும் திராணியில்லாத அதிமுகவினர்,கன்னியாகுமரி முதல் சென்னை வரைதிமுகழகத்தை விமர்சித்து தங்கள் உண்மை முகத்தை காண்பித்துள்ளனர்.'' என்றுள்ளார்.
மேலும் ''நாங்களும் போராடினோம் என்று மக்களை ஏமாற்ற அதிமுக போட்ட நாடகம், அவர்களது எஜமானர்களைக் கண்டிக்க முடியாத அவதி ஆகியவற்றால், மக்கள் மன்றத்தில் அவர்களுடைய முகத்திரை கிழிந்து அவமானத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.'' என்றுள்ளார்.
-
மேகதாதுவின் மோதலும்.. பெங்களூருவின் வலியும்.. தமிழகத்தை பாதிக்காமல் மாற்று வழி உள்ளதா? -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications