மதுவினால் அதிக பெண்களை விதவையாக்கிய அதிமுக- திருச்சியில் கனிமொழி எம்.பி சாடல் பேச்சு

Subscribe to Oneindia Tamil

திருச்சி: தமிழகத்தில் ஆளும் அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை. மதுவால் அதிகளவிலான விதவைகளை உருவாக்கிய பெருமை தமிழக அரசையே சேரும் என்று திருச்சியில் திமுக எம்.பி கனிமொழி குற்றம் சாட்டி பேசினார்.

திருச்சியில் உழவர் சந்தை மைதானத்தில் மாநில தி.மு.க மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, பிரச்சார குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ADMK creates more number of widows in TN

இந்த ஆலோசனை கூட்டத்தில் மகளிரணி தலைவி கனிமொழி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் கனிமொழி பேசுகையில், "கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிக பெண்களை விதவைகளாக்கிய சாதனை அதிமுக ஆட்சியில் தான் நிறைவேறி உள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறை , கொலை , பலாத்காரம் என மொத்தம் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. தமிழகத்தில் பள்ளிச்சிறுமிக்கு வலுக்கட்டாயமாக பச்சை குத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.

ஸ்டிக்கர் கலாச்சாரம் பெருகி கண்கள் விழித்திருந்தால் கூட உங்கள் நெற்றியில் ஒட்டும் அநாகரீகமான ஆட்சி தான் அதிமுக ஆட்சி. எனவே 2016 ஆம் ஆண்டு திமுக ஆட்சியை பிடிக்க வேண்டும். அதற்கு பெண்களாகிய நீங்கள் மக்களுக்கு எடுத்துக் கூறி திமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும். ஆண்களின் வெற்றிக்கு பின்னால் பெண்கள் இருப்பார்கள் என்ற கூற்றை உறுதி செய்ய மீண்டும். திமுக வெற்றி பெற இந்த மகளிரணி காரணமாக இருக்க வேண்டும்" என்று கேட்டு கொண்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+