ராஜிவ் கொலை வழக்கில் தீர்ப்பை விமர்சிப்பதா? 'நா.சா" மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு- அதிமுக கோரிக்கை!
புதுச்சேரி: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த மத்திய அமைச்சர் நாராயணசாமி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவேண்டும் என புதுவை மாநில அதிமுக செயலாளர் ஆ.அன்பழகன் எம்எல்ஏ வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று புதுவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அவர்களை விடுதலை செய்வது மாநில அரசின் பொறுப்பு எனவும் கூறியிருந்தது.

இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா, அமைச்சரவையில் எடுத்த முடிவின்படி 7 பேர் விடுதலை செய்யப்படுவர் என சட்டசபையில் அறிவித்தார்.
இந்நிலையில், வழக்கை சரியாக ஆராயாமல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பு முன்னுக்குப் பின் முரணாக உள்ளது என மத்திய அமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.
எனவே அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும் என ஜனாதிபதிக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் கோரிக்கை மனு அனுப்பப்படும். மேலும் ராஜிவ் கொலை வழக்குப் பிரச்னையில் அதிமுக இரட்டை வேடம் போடுவதாக நாராயணசாமி கூறியுள்ளார். உண்மையில் காங்கிரஸ்தான் இரட்டை வேடம் போடுகிறது.
இவ்வாறு அன்பழகன் கூறினார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications