சுமூக பேச்சுவார்த்தை நடக்கும்...இயற்கையான தாமதம்- என்னதான் சொல்றார் பொன்னையன்
சென்னை: அதிமுக இரு அணிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறும் என்று ஓபிஎஸ் அணியின் பொன்னையன் கூறியுள்ளார். ஆனால் எப்போது நடக்கும் என்று கூறவில்லை. அதே போல எங்கள் கோரிக்கைகளை ஈபிஎஸ் அணி நிச்சயமாக ஏற்க வேண்டும் என மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை வீனஸ் காலனி இல்லத்தில் ஆலோசனைக்கு பின் பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்துவது குறித்து ஆலோசனை நடந்தது என பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகளுக்கு இடையேயான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அது நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகமும் எழாமல் இல்லை காரணம், இரு அணியினரும் மாறி மாறி பேசும் பேச்சுக்கள்தான்.
எங்களின் இரு கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை என்று ஓபிஎஸ் அணி கூறுகிறது. ஆனால் ஈபிஎஸ் அணியோ முதலில் பேச்சுவார்த்தை என்று ஒற்றை பேச்சில் நிற்கின்றனர்.

ரகசிய பேச்சுவார்த்தை
அதிமுகவின் இரு அணிகளுக்குமிடையே உள்ள தலைவர்கள் ரகசியமாக ஹோட்டல் அறையில் சந்தித்து பேசியுள்ளனர். அதற்கு மறுநாள்தான் சசிகலாவின் பேனர்கள் தலைமை அலுவலகத்தில் இருந்து அகற்றப்பட்டன.

தொடர்பு இருக்கா இல்லைய?
அதே நேரத்தில் அதிமுகவில் சசிகலாவிற்கும், டிடிவி தினகரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினாலும் கட்சி கூட்டங்களில் பிரதானமாக போஸ்டர்களில் சசிகலா இடம் பெற்றிருக்கிறார்.

தொண்டர்கள் மனநிலை
கட்சி, சின்னத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பது அதிமுக தொண்டர்களின் மனநிலை. அதற்கான இரு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அமைச்சர்கள், நிர்வாகிகள் கூறினாலும் எடப்பாடி அணியுடன் இணைவதற்கு பலரும் விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. அதனை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார் ஓபிஎஸ் அணியின் செம்மலை.

கோரிக்கையை ஏற்க வேண்டும்
ஈபிஎஸ் அணியினர் தங்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்த முன் வரவேண்டும் என்று ஓபிஎஸ் அணியின் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். அதே போல பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறும் என்று பொன்னையனும் கூறியுள்ளார்.

அது வேறு இது வேறு
ஈபிஎஸ் அணியினர் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமி பெயர்கள் இடம் பெற்றுள்ளது பற்றி கூறிய பொன்னையன், அது வேறு, இதுவேறு, பேச்சுவார்த்தைக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் பொன்னையன் கூறியுள்ளார்.இரு அணிகளுக்கும் இடையே மறைமுகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இயற்கையான தாமதம்
பொதுச் செயலாளர் குறித்து நாங்கள் எந்தவிதக் கோரிக்கையும் வைக்கவில்லை. இரு அணிகளும் இணைவதில், இயற்கையாகவே கால தாமதம் உண்டாகிவருகிறது. எல்லாம் நல்லபடியாக நடக்கும். பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கும். அதற்கான இணக்கமான சூழல் வரும் என்றும் கூறியுள்ளார்.

நடக்குமா? நடக்காதா?
அமாவாசையில் பேச்சுவார்த்தை நடக்கும் என்றார்கள் அட்சய திருதியையில் இணைப்பு என்றார்கள். இரண்டு நாட்களுமே முடிந்து விட்டது. எப்போது பேசி எப்போது இணைப்பார்கள் நடக்குமா? நடக்காதா என்பதே இப்போது அதிமுக தொண்டர்களின் முன் உள்ள கேள்வியாகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications