அதிமுக 44வது ஆண்டு விழா: கோத்தகிரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு ஜெ., மாலை அணிவித்து மரியாதை
நீலகிரி: அதிமுகவின் 44ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, கோத்தகிரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதிமுக கொடியை ஏற்றிவைத்து விழா மலரையும் வெளியிட்டார்.
அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தொடங்கி 43 ஆண்டுகள் நிறைவடைந்து, 44ம் ஆண்டு விழா இன்று தொடங்குகிறது.

தமிழகம் முழுவதும் அதிமுக தொடக்க நாள்விழாவை கோலகலமாக கொண்டாடி வருகின்றனர். கொடநாட்டில் தங்கியுள்ள முதல்வர் ஜெயலலிதா, இன்று காலை 11.30 மணிக்கு கோத்தகிரி பேரூராட்சியில் உள்ள டானிங்டனில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார். எம்.ஜி.ஆர் படத்திற்கு மலர் தூவினார்.
இதைத் தொடர்ந்து, சிறப்பு மலரையும் வெளியிட்டு இனிப்புகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில், கட்சியின் நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications
